’’தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும்..’’-ஸ்டாலினுக்கு பாஜக பிரமுகர் கோரிக்கை

 

’’தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும்..’’-ஸ்டாலினுக்கு பாஜக பிரமுகர் கோரிக்கை

தமிழ் மருத்துவத்தின் பயன்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல தமிழ் மருத்துவத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். வருமுன் காப்போம் என்ற பொன்மொழிக்கேற்ப கொடும் நோய் தொற்றை தடுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளை மக்களிடம் முன்னெடுத்து செல்வது அவசியமானது. தமிழ்நாட்டில் இருந்து முன்னெடுக்காவிட்டால் யார் முன்னெடுப்பது? என்று கேட்கும் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.

’’தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும்..’’-ஸ்டாலினுக்கு பாஜக பிரமுகர் கோரிக்கை

அவர் மேலும், ‘’கடுந்தொற்று காலத்திலும் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லி மக்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியது அல்லாமல், தமிழ் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மகத்துவத்தையும், பெருமையையும் உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது. இதற்கு அரசு ஆவண சைய்ய வேண்டும். சித்தர்களின் தமிழ் மருத்துவக் களஞ்சியங்களை ஓலைச்சுவடிகள் வழியாக வழங்கி அருந்தொண்டாற்றும் தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும் என்று மரியாதைக்குரிய முதல்வரை நான் கேட்டுக்கொள்கிறேன்’’என்று மு.க.ஸ்டாலுனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

’’தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும்..’’-ஸ்டாலினுக்கு பாஜக பிரமுகர் கோரிக்கை

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த சித்த வைத்தியத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிமுக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில், அவரே முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் நிலையில், தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.