அதிவேகமாக பரவும் கொரோனா… கொத்து கொத்தாக மடியும் மனித உயிர்கள்!

 

அதிவேகமாக பரவும் கொரோனா… கொத்து கொத்தாக மடியும் மனித உயிர்கள்!

இந்தியாவில் ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா காரணமாக பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவை இந்தியாவில் முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருப்பினும் இதுவரை முழு ஊரடங்கிற்கான அறிவிப்பு மத்திய அரசால் அறிவிக்கப்படாத நிலையில் மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அதிவேகமாக பரவும் கொரோனா… கொத்து கொத்தாக மடியும் மனித உயிர்கள்!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,82,315 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த கொரோனா பாதிப்பு 2,06,65,148ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,780 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,26,188 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,51,731 ஆக உயர்ந்துள்ள நிலையில் 3,38,439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இதனால் மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.