எது நடந்து விடக்கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ… ராமதாஸ் ஆவேசம்

 

எது நடந்து விடக்கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ… ராமதாஸ் ஆவேசம்

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

எது நடந்து விடக்கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ… ராமதாஸ் ஆவேசம்

அவர் மேலும், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள வார்த்தைகளில் ஆவேசம் தெறிக்கிறது.

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் சென்னை மதுரவாயல் தொகுதியில் உள்ள ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகத்தினை திமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடியதாக வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டணி கட்சியினான பாஜகவினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவும் அதன் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.