பார்த்திபன் அளித்த முதல் மஞ்சள் மரியாதை

 

பார்த்திபன் அளித்த முதல் மஞ்சள் மரியாதை

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கிறார். நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி இந்த தீவிர தேர்தல் தீவிர பிரச்சாரம் செய்து அவரும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.

பார்த்திபன் அளித்த முதல் மஞ்சள் மரியாதை

இதுகுறித்து நடிகர் ஆர்.பார்த்திபன், ‘’இன்று…இதோ…இப்போது உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல… உதய சூரியன். நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக! வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும், மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும்!’’ என்று தெரிவித்தவர், ‘’திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல, நானும் முதல்வனே!!!
கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”-என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன் !’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

பார்த்திபன் அளித்த முதல் மஞ்சள் மரியாதை

இந்த டுவிட்டுக்கு பலரும் புரி்யாமல் விழிக்க, அந்த கோவை வீடியோவையும் தனது பக்கத்தில் ஷேர் செய்து, ‘’முதல் மஞ்சள் மரியாதை !’’என்று தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.