’’மூஞ்சி டம்மியா இருக்குன்னு பார்க்குறீயா அடி ஒவ்வொண்ணும்…’’: சிக்கிக் கதறிய அதிமுக- திமுக சீனியர்கள்

 

’’மூஞ்சி டம்மியா இருக்குன்னு பார்க்குறீயா அடி ஒவ்வொண்ணும்…’’: சிக்கிக் கதறிய அதிமுக- திமுக சீனியர்கள்

’’மூஞ்சி டம்மியா இருக்குன்னு பார்க்குறீயா அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி இருக்கும்’’ என்று வடிவேலு டயலாக்கை பேசி செமத்தியாக காட்டு காட்டுன்னு காட்டியிருக்கிறார்கள் இரண்டு வேட்பாளர்கள். இதனால் அந்த அதிமுக – திமுக சீனியவர்கள் ரெண்டு பேரும் கதறிவிட்டார்களாம். அதில் ஒருவர், ‘’டம்மி பீசுன்னு நெனச்சா டார் டாரா கிழிச்சு தொங்கவிட்டுட்டியேடா’’ன்னு புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.

’’மூஞ்சி டம்மியா இருக்குன்னு பார்க்குறீயா அடி ஒவ்வொண்ணும்…’’: சிக்கிக் கதறிய அதிமுக- திமுக சீனியர்கள்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொடர்ந்து போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன். பக்கத்து மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி. எதிரெதிர் அணியில் இருந்தாலும் இவர்கள் ரெண்டு பேரும் எதிரும் புதிருமாக எப்போதும் இருந்ததில்லையாம். கிட்டத்தட்ட மாமன் – மச்சான் உறவு மாதிரியே இவர்கள் இருந்து வருகிறாரார்களாம். காட்பாடியிலும், ஜோலார்பேட்டையிலும் தொடர்ந்து இவர்கள் வெற்றி பெற்று வருவதற்கு காரணம், இவர்கள் வகுத்து வைத்திருக்கும் வெற்றி சூத்திரம்தான்.

’’மூஞ்சி டம்மியா இருக்குன்னு பார்க்குறீயா அடி ஒவ்வொண்ணும்…’’: சிக்கிக் கதறிய அதிமுக- திமுக சீனியர்கள்

அது என்ன வெற்றிச் சூத்திரம்? இந்த இரு மாவட்டங்களை பொறுத்தவரைக்கும் இவர்கள் சொல்லும் நபர்களூக்குத்தான் கட்சி தலைமை சீட் கொடுக்கும். தொடர்ந்து இவர்கள் இரண்டு பேரும் வெற்றி பெற, எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை டம்மி வேட்பாளர்களாக பார்த்து போட்டுக்கொண்டிருந்து வந்திருக்கிறார்கள்.

துரைமுருகனுக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை டம்மி பீஸ்களாக பார்த்து களமிறக்கி விட்டு வந்திருக்கிறார் வீரமணி. அதே மாதிரி, ஜோலார்பேட்டையில் வீரமணிக்கு எதிராக போட்டியிடும் திமுக வேட்பாளர்களை டம்மி பீஸ்க்களாக பார்த்து களமிறக்கி வந்திருக்கிறார் துரைமுருகன். இதனால் இருவரின் வெற்றியும் எளிதானதாக இருந்து வந்திருக்கிறது.

’’மூஞ்சி டம்மியா இருக்குன்னு பார்க்குறீயா அடி ஒவ்வொண்ணும்…’’: சிக்கிக் கதறிய அதிமுக- திமுக சீனியர்கள்

இரு கட்சியின் தலைமைக்கும் இது தெரிந்துபோனது. இந்த முறை இதை விடக்கூடாது என்று ஸ்டாலின் மறைமுகமாக வேலை பார்த்திருக்கிறார்.

எப்போதும் போலவே இந்த தேர்தலிலும் அப்படித்தான் டம்மி பீஸ் என்று நினைத்து இருவரும் களமிறங்கினார்கள். வாக்கு எண்ணிக்கையில் 8 சுற்றுகள் வரைக்கும் 6,500 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனை கதற விட்டார் ராமு. அடுத்து 20 சுற்றுகள் வரைக்கும் கூட 500,800 என்ற கணக்கில் துரைமுருகனை கதறவிட்டார் ராமு. கடைசியில் வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் வந்து, பின்னர் தபால் ஓட்டுக்களால் 746 வாக்குகள் வித்தியாசத்தில் தப்பித்தார் துரைமுருகன்.

’’மூஞ்சி டம்மியா இருக்குன்னு பார்க்குறீயா அடி ஒவ்வொண்ணும்…’’: சிக்கிக் கதறிய அதிமுக- திமுக சீனியர்கள்

துரைமுருகனாவது பரவாயில்லை. குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால், வீரமணியின் நிலைமைதான் பரிதாபமாக ஆகிவிட்டது. நோஞ்சான் என்று நினைத்த ஆள் அஞ்சான் கணக்காக நின்று ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பார்க்குறியா.. பார்க்குறி்யா என்று பாய்ந்து வந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் அலறிப்போய் விட்டார்.

வீரமணியை எதிர்த்து போட்டியிட்ட தேவராஜ். வீரமணியிடமே டெண்டர் வேலைகள் எடுத்து செய்து வந்திருக்கிறார். இது நம்ம ஆளு என்று வீரமணியும் அலட்சியமாக இருந்திருக்கிறார். ஆனால், தேவராஜிடம் பேசிய ஸ்டாலின், வீரமணி்யை தோற்கடிக்காவிட்டால் மா.செ. பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்க, பணத்தை அள்ளி இறைத்து, வீரமணியை தோற்கடித்திருக்கிறார்.

பூனைகள் என்று நினைத்த ராமுவும், தேவராஜும் புலிகளாக மாறியதால் துரைமுருகனும், வீரமணியும் கதறிய கதையைத் தான் அதிமுக – திமுகவினர் அதிகம் பேசி வருகிறார்கள்.