நோட்டாவின் வீழ்ச்சிக்கு காரணமான இரண்டு கட்சிகள்!

 

நோட்டாவின் வீழ்ச்சிக்கு காரணமான இரண்டு கட்சிகள்!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் தேர்வு செய்ய விருப்பமில்லாத வாக்காளர்கள், தங்களின் வாக்கை பதிவு செய்யும் வசதியாக ’நோட்டா’வை அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்.

நோட்டாவின் வீழ்ச்சிக்கு காரணமான இரண்டு கட்சிகள்!

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 5. 82 லட்சம் வாக்குகள் பதிவாகின நோட்டாவுக்கு. மொத்தம் பதிவான வாக்குகளில் 1.4 சதவீதமாக இருந்தது. இதை அடுத்து 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவிற்கு 5.65 அஞ்சு லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தம் பதிவான வாக்குகளில் 1.3 சதவீதமாக இருந்தது.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நோட்டா வாக்குகள் அதிகமாகவே குறைந்திருக்கிறது. இத்தேர்தலில் 3.45 லட்சம் வாக்குகள் மட்டுமே நோட்டாவிற்கு பதிவாகி இருக்கிறது. மொத்தம் பதிவான வாக்குகளில் 0.75 சதவிகிதம் தான் ஆகும். இந்த வீழ்ச்சிக்கு காரணமாக இரண்டு கட்சிகளை காரணங்காட்டி பேசப்படுகிறது.

திமுக , அதிமுக கூட்டணிக்கு மாற்றாக வேறு கட்சியை விரும்பியவர்கள் நாம் தமிழர் கட்சிக்கும், மக்கள் நீதி மையத்திற்கும் தங்கள் வாக்குகளை செலுத்தி விட்டதால்தான் நோட்டாவிற்கான வாக்காளர்கள் குறைந்து இருக்கிறார்கள் என்று கணிக்கப்படுகிறது.

அதனால்தான் நாம் தமிழர்கள் கட்சி, வாக்கு சதவிகிதத்தில் மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்று தெரிகிறது.