காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 254 நிபுணர்கள்! – காவல்துறை விளக்கம்

 

காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 254 நிபுணர்கள்! – காவல்துறை விளக்கம்

தமிழக போலீசாருக்கு 254 மனநல நிபுணர்கள் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை நடந்து வருகிறது.

காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 254 நிபுணர்கள்! – காவல்துறை விளக்கம்அப்போது சாத்தான்குளத்தில் விசாரணைக்கு சென்ற மாஜிஸ்திரேட்டை காவலர் ஒருவர் அவதூறாக பேசியது தொடர்பாக தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தம் காரணமாக அவ்வாறு பேசிவிட்டார் என்று அரசு தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. இந்த நிலையில் மன அழுத்தம் போக்கக் காவலர்களுக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பாக சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர்.

காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 254 நிபுணர்கள்! – காவல்துறை விளக்கம்இதற்கு இன்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 254 மன நல நிபுணர்கள் போலீசாருக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டு வருவதாக பதில் அளிக்கப்பட்டது. மேலும், பல்வேறு சோதனைகள் அடிப்படையில் காவலர்களுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தம் உள்ளது என்று கண்காணிக்கப்படுவதாக மனநல நிபுணர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகரித்துவரும் மன அழுத்த பிரச்னை தொடர்பாக நீதிபதிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.