’’ஓவைசி வந்த வேலையை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றுவிட்டான்.. நாசமாபோக’’

 

’’ஓவைசி வந்த வேலையை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றுவிட்டான்.. நாசமாபோக’’

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுவதாக சொல்லி வந்த நிலையில், அக்கட்சிக்கு முதலில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று போராடித்தான் இன்னொரு இடத்தை பெற்றது. சிதம்பரம், கடையநல்லூர், வாணியம்பாடி ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் இக்கட்சி போட்டியிட்டது.

’’ஓவைசி வந்த வேலையை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றுவிட்டான்.. நாசமாபோக’’

சிதம்பரத்தில் அப்துல் ரஹ்மான், கடையநல்லூரில் முகமது அபுபக்கர், வாணியம்பாடியில் முகமது நயீம் களமிறங்கினர்.

மனித நேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக சொல்லியும் அக்கட்சிக்கு 2 இடங்களைத்தான் ஒதுக்கியது திமுக. ஆனால், அந்த இரண்டு தொ்குதிகளையும் பெற்றுக்கொண்டு, மணப்பாறை- பாபநாசம் தொகுதிகள் வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது.

’’ஓவைசி வந்த வேலையை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றுவிட்டான்.. நாசமாபோக’’

மணப்பாறையில் போட்டியிட்ட அப்துல் சமத் 98,077 வாக்குகளும், பாபநாசத்தில் போட்டியிட்ட எம்.எச். ஜவஹிருல்லா 86,567 வாக்குகளும் பெற்றனர்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் மணப்பாறை- பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே வென்றது மனித நேய மக்கள் கட்சி. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிட்டதால், சிதம்பரம், கடையநல்லூர், வாணியம்பாடி, ஆகிய மூன்று தொகுதிகளில் தோல்வியை தழுவியது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.

’’ஓவைசி வந்த வேலையை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றுவிட்டான்.. நாசமாபோக’’

ஆனால் தோல்வி குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ’’ஓவைசி நின்றால் ஓட்டை பிரித்து பாஜக அணிக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று எல்லோரும் சொன்னோம். நடந்திருக்கிறது.
வாணியம்பாடியில் அதிமுக- 75982, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -74579, வித்தியாசம் – 1403. இதில், உவைசி AIMIM கட்சி பிரிச்ச ஓட்டு 1753. இந்த 1753 பேரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு போட்டிருந்தால் வானியாம்பாடியில் லீக் வெற்றிருக்கும். ஓவைசி வந்த வேலையை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றுவிட்டான். நாசமாபோக’’ என்று ஆவேசப்பட்டுள்ளார் எம்ஜிகே நிஜாமுதீன்.