அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

 

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

திரையுலக பிரபலங்களில் பெரிய கட்சிகளில் இணைந்து அல்லது பெரிய கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டவர்களே வெற்றி வாகை சூடி வருகிறார்கள். சுயேட்சைகளாகவோ, அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிடும் பலரும் தோல்வியையே சந்தித்து வருகிறார்கள்.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டாலும் தனது செல்வாக்கினால் விஜயகாந்த் வென்றார். எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியில் கூட அவரால் உட்கார முடிந்தது. ஆனால், சீமான், கமல்ஹாசன், குஷ்பு, ஸ்ரீபிரியா, மன்சூர் அலிகான், மயில்சாமி, கவிஞர் சினேகன் என்று போட்டியிட்ட திரை பிரபலங்கள் அனைவருமே தோல்வி்யை தழுவியுள்ளனர். இதில் மன்சூர் அலிகான், மயில்சாமி ஆகியோர் டெபாசிட்டும் இழந்துள்ளனர்.நடிகர்கள் உதயநிதியும், நடிகர் விஜய் வசந்தும் மட்டுமே அமோக வெற்றியை பெற்றுள்ளனர்.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

நான் செல்லும் இடங்களில் எல்லாம் என் கார் கப்பல் ஆகிவிடுகிறது அந்த அளவிற்கு கூட்டத்தில் கார் மிதக்கிறது என்று பெருமையாக சொல்லி வந்தார் நடிகர் கமலஹாசன். பிரச்சாரத்தில் தனக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து அப்படி ஆனந்தப்பட்டு வந்தார் கமலஹாசன் ஆனால் கூடுகிற கூட்டம் எல்லாம் ஓட்டுக்காக மாறுவதில்லை என்கிற உரிமை அவருக்கு இப்போது தெரிய வந்திருக்கிறது.

மக்கள் நீதி மையம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் களம் இறங்கிய நடிகை ஸ்ரீபிரியா 53 ஆயிரத்து 488 வாக்குகள் பெற்று தோல்வியை அடைந்தார். இத்தேர்தைல் இவர் பெற்றது 14 ஆயிரத்து 904 வாக்குகள் மட்டுமே.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

மக்கள் நீதி மையம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் களம் இறங்கிய நடிகை ஸ்ரீபிரியா 53 ஆயிரத்து 488 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் வேலு 68 ஆயிரத்தி 392 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் நடிகை ஸ்ரீபிரியா வெறும் 14 ஆயிரத்து 904 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் முதல்வர் வேட்பாளரான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதி போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். கமலஹாசன் 51 ஆயிரத்து 481 வாக்குகள் பெற்று இருந்த நிலையிலும் கூட வானதி சீனிவாசன் 53 ஆயிரத்து 209 வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார்.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கினார் நடிகை குஷ்பு. இத் தொகுதியில் போட்டியிட்ட குஷ்புவுக்கு 39 ஆயிரத்து 405 வாக்குகள் கிடைத்தது. ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எழிலனுக்கு 71 ஆயிரத்து 867 வாக்குகள் கிடைத்தது. 32 ஆயிரத்து 462 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்
குஷ்பு.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

நடிகரும் , திரைப்பட இயக்குனருமான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கி 39 ஆயிரத்து 588 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் கேபி சங்கர் 88185 வாக்குகளைப்பெற்று வென்றார். இத்தேர்தலில் 48 ஆயிரத்து 597 வாக்குகள் கிடைத்துள்ளன சீமானுக்கு.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

மக்கள் நீதி மய்யம் சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார் திரைப்பட பாடலாசிரியர் சினேகன். 57 ஆயிரத்து 412 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார். இத்தேர்தலில் அவருக்கு 16 ஆயிரத்து தொள்ளாயிரத்து 39 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரபாகர ராஜாவுக்கு 74 ஆயிரத்து 3ஆயிரத்து 351 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கு வெறும் ஆயிரத்து 440 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தனைக்கும் நடிகை நடிகர் மயில்சாமி இந்த தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். சென்னை வெள்ளத்தின் போது படகில் சென்று பலருக்கும் உதவி வந்தவர். நடிகர் மயில்சாமி தன் வீட்டில் சமைத்து, அந்த உணவை படகில் எடுத்துச் சென்று தண்ணீரில் தத்தளித்து பசியால் வாடுவோருக்கு கொடுத்து வந்தவர் இன்னும் பல ஏராளமான உதவிகளை மக்களுக்கு செய்திருக்கின்றார். அப்படி இருந்தும் கூட அவருக்கு ஆயிரத்து 440 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடைசி நேரத்தில் விலகி தனிக்கட்சி தொடங்கி, அதையும் நிறுத்திவைத்துவிட்டு, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூரலிகானுக்கு வெறும் 428 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ். பி. வேலுமணி ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 225 வாக்குகள் கிடைத்துள்ளன.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

நடிகர் விஜய் வசந்த் தனது அப்பாவின் மறைவுக்குப் பிறகு காங்கிரசில் இணைந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 950 வாக்குகள் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு 4 லட்சத்து 38 ஆயிரத்து 87 வாக்குகள் கிடைத்துள்ளன.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

நடிகர் விஜய் வசந்துக்கு 5 லட்சத்து 76 ஆயிரத்து 37 வாக்குகள் கிடைத்துள்ளன தந்தை வசந்தகுமார் இறந்ததால் இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது தந்தை வசந்தகுமாரின் அனுதாபம் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆகிய பலத்தினால் மட்டுமே நடிகர் விஜய் வசந்த் அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறார் அதேமாதிரி உதயநிதி ஸ்டாலினும் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 69 ஆயிரத்து 335 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இத்தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்
.

அமோக வெற்றி பெற்ற நடிகர்களும், டெபாசிட் இழந்த நடிகர்களும்..!

திமுக வேட்பாளராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இத்தேர்தலில் இவருக்கு 93 ஆயிரத்து 285 வாக்குகள் கிடைத்துள்ளன.