அந்த நாற்காலியில் அமரப்போவது ஓ.பன்னீர்செல்வமா? எடப்பாடி பழனிச்சாமியா?

 

அந்த நாற்காலியில் அமரப்போவது ஓ.பன்னீர்செல்வமா? எடப்பாடி பழனிச்சாமியா?

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக நடந்து முடிந்த தேர்தலில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 156 இடங்களிலும், அதிமுக கூட்டணி 78 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் திமுக ஆளும் கட்சி வரிசையிலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசையிலும் அமர இருக்கிறது.

அந்த நாற்காலியில் அமரப்போவது ஓ.பன்னீர்செல்வமா? எடப்பாடி பழனிச்சாமியா?

எதிர்க்கட்சித் தலைவராக எதிர்வரிசையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அமர்வாரா? அல்லது அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய எடப்பாடி பழனிச்சாமி அமர்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினெட் அந்தஸ்து உள்ள பதவி என்பதால் அதிமுகவினர் மத்தியில் மட்டுமல்லாது அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் அந்த நாற்காலியில் அமரப்போவது ஓ.பன்னீர்செல்வமா? எடப்பாடி பழனிச்சாமியா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.