ஈபிஎஸ் சாதனையை முறியடித்த எ.வ.வேலு

 

ஈபிஎஸ் சாதனையை முறியடித்த எ.வ.வேலு

எடப்பாடி பழனிச்சாமியின் சாதனையை முறியடித்திருக்கிறார் திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

ஈபிஎஸ் சாதனையை முறியடித்த எ.வ.வேலு

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி தொகுதியில் 1,60,531 வாக்குகள் பெற்று, 92 ஆயிரத்து 708 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 67 ஆயிரத்து, 823 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் எ.வ.வேலு 137876 வாக்குகளும்,

பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேல் 43203வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஈபிஎஸ் சாதனையை முறியடித்த எ.வ.வேலு

1962 முதல் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் திருவண்ணாமலை தொகுதியில் 15 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றிருக்கின்றன. இதில் திமுக 9 முறையும், காங்கிரஸ் கட்சி 6 முறையும் வெற்றியை பெற்றுள்ளன.

2011 இல் நடந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் நின்று 84 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான ராமச்சந்திரனை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் எ.வ வேலு. எஸ் ராமச்சந்திரன் 79 ஆயிரத்து 676 வாக்குகள் பெற்றிருந்தார். இதை அடுத்து 2016 இல் நடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 484 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் பெருமாள் நகர் கே. ராஜன் 66 ஆயிரத்து 136 வாக்குகள் பெற்றிருந்தார். 1916 வாக்குகள் பெற்ற பாமக எல். பாண்டியன் மூன்றாம் இடத்திற்கு சென்றார்.

ஈபிஎஸ் சாதனையை முறியடித்த எ.வ.வேலு

2021 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்கினார் எ.வ.வேலு. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் களமிறங்கினார் தணிகைவேல். அமமுக பஞ்சாட்சரம் மக்கள் நீதி மய்யம் அருள், நாம் தமிழர் கட்சி கமலக்கண்ணன் ஆகியோரும் களமிறங்கினர். இதில் எ.வ.வேலு வெற்றி பெற்றார் என்பதோடு அல்லாமல், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவராக இருக்கிறார் எ.வ.வேலு.