தந்தைக்கு கிடைக்காதது மகனுக்கு கிடைத்தது!

 

தந்தைக்கு கிடைக்காதது மகனுக்கு கிடைத்தது!

அத்தனை போராடியும் ஸ்டாலினுக்கு கிடைக்காதது இத்தனை எளிதில் உதயநிதிக்கு கிடைத்துவிட்டதே என்று திமுகவினரே ஆச்சர்யமாக பேசிக்கொள்கின்றனர்.

தந்தைக்கு கிடைக்காதது மகனுக்கு கிடைத்தது!

திமுகவில் படிப்படியாக வெற்றியை சந்தித்தவர் மு. க. ஸ்டாலின் அவர். 31 வயதில் தேர்தலில் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை கண்டார். ஆனால் 43 வயதில் முதன் முதலாக தேர்தலை சந்தித்து முதல் தேர்தலிலேயே வெற்றி வெற்றி பெற்று முத்திரை பதித்திருக்கிறார் உதயநிதி. தந்தைக்கு கிடைக்காதது மகனுக்கு கிடைத்திருக்கிறது.

1984 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் முதன்முறையாக களமிறங்கினார் ஸ்டாலின். அப்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரமது. அவர் தமிழகத்திற்கு வராமலேயே அதிமுக அந்த தேர்தலில் வென்றது. அந்த தேர்தலில் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார்.

தந்தைக்கு கிடைக்காதது மகனுக்கு கிடைத்தது!

முதல் தேர்தலில் அவர் தோல்வியை பெற்றாலும், ஆயிரம் விளக்கில் 84 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த ஸ்டாலின் 89 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 91 இல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு கிருஷ்ணசாமியிடம் வெற்றியை இழந்தார்.

பின்னர் மீண்டும் 96 இல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதையடுத்து 2001, 2006 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மு. க. ஸ்டாலின். ஆனால் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கி வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த தொகுதியில் உதயநிதியின் தாத்தா கருணாநிதி மூன்று முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.