தி.நகரில் ஜெ.கருணாநிதி வெற்றி

 

தி.நகரில் ஜெ.கருணாநிதி வெற்றி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி 47 ஆயிரத்து 673 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் 42 ஆயிரத்து 968 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

தி.நகரில் ஜெ.கருணாநிதி வெற்றி

தி.நகர் எனும் தியாகராய நகர் சென்னையின் இதயப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. இத்தொகுதி 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தி. நகர் பகுதி என்றால் தமிழக மக்கள் அனைவருமே அறிவ.ர் அதற்கு காரணம் முன்னணி ஜவுளி ஆடை விற்பனையகங்கள் இங்குதான் இருக்கின்றன.

இந்த தி. நகர் தொகுதி இதுவரை 14 தேர்தலை சந்தித்து இருக்கிறது. இந்த தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. கே. விநாயகம். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று தி. நகர் தொகுதியின் முதல் எம்எல்ஏ ஆனார்.

திமுக இந்த தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக நான்கு முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் இரண்டு முறையும், ஸ்தாபன காங்கிரஸ், தாமாகா தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன . காகாதேகா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

தி.நகரில் ஜெ.கருணாநிதி வெற்றி

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் 53 ஆயிரத்து 207 வாக்குகள் பெற்று வென்றார். திமுக வேட்பாளர் என். எஸ். கனிமொழி 52 ஆயிரத்து 52 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். பாஜக வேட்பாளர் எச். ராஜா 19 ஆயிரத்து 888 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக சத்தியா, திமுக வேட்பாளராக ஜெ. .கருணாநிதி, அமமுக வேட்பாளராக ஆர். பரமேஸ்வரன், மக்கள் நீதி மையம் வேட்பாளராக பழ. கருப்பையா, நாம்தமிழர் வேட்பாளராக சிவசங்கரி ஆகியோர் களமிறங்கினர். இதில் திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி 47 ஆயிரத்து 673 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் 42 ஆயிரத்து 968 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பழ. கருப்பையா 11 ஆயிரத்து 582 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவசங்கரி 6546 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பரமேஸ்வரன் 1511 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் அதிக வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.