ஜான் பாண்டியன் தோல்வி: எழும்பூரில் திமுக பரந்தாமன் வெற்றி

 

ஜான் பாண்டியன் தோல்வி: எழும்பூரில் திமுக பரந்தாமன் வெற்றி

சென்னை எழும்பூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை தோற்கடித்து திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றிபெற்றார்.

ஜான் பாண்டியன் தோல்வி: எழும்பூரில் திமுக பரந்தாமன் வெற்றி

சென்னை எழும்பூர் தொகுதி தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதி. அதற்கு காரணம் எழும்பூர் ரயில் நிலையம். எந்த நேரமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் தொகுதி அது. மேலும் அருங்காட்சியகமும், உலகப் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகம் இத்தொகுதியில் தான் அமைந்திருக்கிறது. இந்த எழும்பூர் தொகுதியில் 1957ஆம் ஆண்டு எழும்பூர் தனி தொகுதி உருவாக்கப்பட்டது. இதுவரைக்கும் 14 முறை இங்கே தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த 16 முறை நடந்த தேர்தலில் 11 முறை திமுகவும் காங்கிரஸ் கட்சி இரண்டு முறை, தேமுதிக ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஜான் பாண்டியன் தோல்வி: எழும்பூரில் திமுக பரந்தாமன் வெற்றி

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கே. எஸ். ரவிச்சந்திரன் 55, 060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி 44 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியனுக்கு எழும்பூர் தனித்தொகுதி ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் பரந்தாமனும் , தேமுதிக வேட்பாளராக பிரபுவும், மக்கள் நீதி மையம் வேட்பாளர் பிரியதர்ஷினி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கீதாலட்சுமி களமிறங்கி இருந்தனர்.

ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த வாக்குப் பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் பரந்தாமன் 60 ஆயிரத்து 222 வாக்குகளும், ஜான்பாண்டியன் 27 ஆயிரத்து 673 வாக்குகளும், பிரியதர்ஷினி 1228 வாக்குகளும், கீதாலட்சுமி 4625 வாக்குகளும், பிரபு 974 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் ஜான்பாண்டியனை தோற்கடித்து பரந்தாமன் வெற்றி பெற்றுள்ளார்.