ஸ்டாலின் வெற்றிக்கு அர்விந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

 

ஸ்டாலின் வெற்றிக்கு அர்விந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

திமுக கூட்டணி 153 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பினை பெற்றிருக்கிறது. இதையடுத்து திமுதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்பது உறுதியாகிவிட்டதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் வெற்றிக்கு அர்விந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மு.க,ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதால் மு.க.ஸ்டாலினுக்கும், கேரளாவில் மீண்டும் வெற்றி வாய்ப்பினை பெறூவதால் பினராயி விஜயனுக்கும், மேற்கு வங்கத்தில் மீண்டும் வெற்றி பெறுவதால் மம்தாவுக்கு அர்விந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.