மு.க.ஸ்டாலின் எனும் நான்… #முகஸ்டாலின்எனும்நான்

 

மு.க.ஸ்டாலின் எனும் நான்… #முகஸ்டாலின்எனும்நான்

வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி பெரும்பான்மையை வகித்து வருகிறது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி திமுக ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து திமுகவினர், தேர்தல் ஆணையத்தின் தடையையும் மீறி சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திரண்டு, பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். இனிப்புகளை வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

மு.க.ஸ்டாலின் எனும் நான்… #முகஸ்டாலின்எனும்நான்

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்திருந்தது தேர்தல் ஆணையம். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தான் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை வெளியிட்டிருந்தது. பட்டாசு வெடிக்க கூடாது, ஊர்வலமாக செல்லக்கூடாது , இனிப்பு வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விதித்த அத்தனை தடைகளையும் மீறி திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெற்றி கொண்டாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

திமுக தலைவரும் கூட, வீட்டுக்குள் இருந்தே வாக்கு எண்ணிக்கையை கவனியுங்கள். வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஆனாலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும் சூழல் வருவதால் இந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அண்ணா அறிவாலயத்துக்கு திரண்டு வந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ’’ஸ்டாலின்தான் வாராரு…விடியல் தரப்போறாரு..’’என்று பாடி, வெற்றியை கொண்டாடி வந்தனர்.

மு.க.ஸ்டாலின் எனும் நான்… #முகஸ்டாலின்எனும்நான்

இந்நிலையில், ஆட்சி அமைக்க இருப்பது திமுக தான். வெற்றி சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் உடனடியாக தலைமையை தொடர்பு கொள்ளவும். வெற்றி சான்றிதழ் பெறும் வரைக்கும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக்கூடாது. தொண்டர்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் பெருந்தொற்று பரவக் காரணம் ஆகிவிடக் கூடாது. திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என்று அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதை உறுதி செய்யும் விதமாக, மு.க.ஸ்டாலின் எனும் நான்… #முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.