துறைமுகம்: திமுக கோட்டையில் பாஜக கொடி

 

துறைமுகம்: திமுக கோட்டையில் பாஜக கொடி

தமிழக தலைமைசெயலகமான புனித ஜார்ஜ்கோட்டை, உயர்நீதிமன்றம், துறைமுகம் என மாநிலத்தின் முக்கிய இடங்கள் அமைந்திருக்கும் தொகுதி துறைமுகம். சென்னை மாவட்டத்திலேயே மிக குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி இது. 1951ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மூன்று முறையும், சுயேட்சை ஒருமுறையும், அதிமுக ஒருமுறையும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பழ.கருப்பையா வென்றார்.

துறைமுகம்: திமுக கோட்டையில் பாஜக கொடி

திமுகதான் இங்கே 10 முறை வென்றுள்ளது. கருணாநிதி இரண்டு முறையும், பேராசிரியர் அன்பழகன் மூன்று முறையும் இத்தொகுதியில் வென்றுள்ளனர்.

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பி.சேகர்பாபு கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு 42,071 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சீனிவாசன் 37, 235 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தார். பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் நதானி 3,357 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

துறைமுகம்: திமுக கோட்டையில் பாஜக கொடி

2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் பி.கே.சேகர்பாபு களமிறங்கினார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் வினோஜ் பி. செல்வம் களமிறங்கினார். அமமு சார்பில் பி.சந்தான கிருஷ்ணன், மநீம சார்பில் கிச்சா ரமேஷ், நாதக சார்பில் அகமது பாசில் ஆகியோரும் களத்திலிருந்தனர்.

துறைமுகம்: திமுக கோட்டையில் பாஜக கொடி

இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிகையில், பி.கே.சேகர்பாபு இதுவரைக்கும் 1,702 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வினோஜ் பி.செல்வம் 3,142 வாக்குககள் பெற்று 1440 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதற்கு அடுத்த கட்டத்தில் பாஜக 5,352 வாக்குகளும், திமுக 4,454 வாக்குகளும் பெற்றுள்ளதால் 898 வாக்குகள் வித்தியாசத்தில் வினோஜ் முன்னிலையில் இருக்கிறார்.

துறைமுகம்: திமுக கோட்டையில் பாஜக கொடி

திமுக கோட்டையில் பாஜக கொடியை நாட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்தடுத்த சுற்றுகளில் மாற்றம் நிகழ்ந்தாலும் கூட, திமுக கோட்டையில் பாஜக முன்னிலை வகிப்பதே வெற்றிதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.