மூன்றாவது இடம் சீமானுக்கா?

 

மூன்றாவது இடம் சீமானுக்கா?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக அமமுக மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிதான் ஒன்று முதல் ஏழு இடங்களை பிடிக்கும் என்று சொல்கின்றன. நாம் தமிழர் கட்சி வெற்றி வாய்ப்பு குறித்து எந்த கருத்து கணிப்புகளும் சொல்லவில்லை. ஆனால் மற்றவை என்று குறிப்பிட்டிருக்கிறது கருத்துக்கணிப்பு முடிவுகள்.

மூன்றாவது இடம் சீமானுக்கா?

அந்த மற்றவை என்பதில் நாம் தமிழர் கட்சியும் இருக்கிறதா என்பது நாளை தெரியவரும். இதற்கிடையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் வகிக்கப் போகும் கட்சி எது என்று என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

பேச்சு என்பதைவிட விவாதம் என்பதாகத்தான் இருக்கிறது. தேமுதிக இந்த தேர்தலில் தனது சக்தியை இழந்து விட்டது. அமமுகவிடம் அக்கட்சி கூட்டணி அமைத்த போதே தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது என்கிறார்கள். இதனால் மூன்றாவது இடம் அக்கட்சிக்கு கிடைக்கப் போவதில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மூன்றாவது இடம் சீமானுக்கா?

அமமுகவை பொருத்தவரை அக்கட்சி வாங்கிய ஓட்டுகள் அனைத்தும் அதிமுக ஓட்டுகள் தான். ஒரு சில இடங்களை பெற்றாலும் கூட சில சதவிகிதம் பெற்றாலும் கூட அக்கட்சி மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

மூன்றாவது இடம் சீமானுக்கா?

இதற்கு அடுத்தபடியாக இருப்பது மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சியும் தான். மக்கள் நீதி மையம் கட்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. அக்கட்சியும் சில வாக்கு சதவீதம் எடுக்கும் என்றும் எல்லோரும் நம்புகிறார்கள். அதேநேரம் நாம் தமிழர் கட்சிக்கு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால் அக்கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். அதனால் தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கப் போகும் கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்கிறார்கள்.