ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்… சீனியர்களிடம் எடப்பாடி உருக்கம்

 

ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்… சீனியர்களிடம் எடப்பாடி உருக்கம்

அதிமுகவினரால் தில்லுமுல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என திமுகவினருக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அதுபோலவே திமுகவினரால் தில்லு முல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருந்து கவனித்து, வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துவிட்டது என்று அறிவித்த பின்னர்தான் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அதிமுகவினருக்கு அறிவுறுத்துகின்றனர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும்.

ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்… சீனியர்களிடம் எடப்பாடி உருக்கம்

இது ஒருபுறமிருக்க கடந்த 29 ஆம் தேதி அன்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாமே திமுக அதிக இடங்களை வெல்லும் அக்கட்சி தான் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறது என்றே சொல்லியதால், அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவியது.

அன்றைய தினமே அதிருப்தியில் இருந்த சீனியர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் சீனியர்களிடம் பேசியபோது, அதிமுக சார்பில் தனியாக எக்ஸிட் போல் நடத்தப்பட்டது. ஏஜென்சி வைத்து அந்த எக்ஸிட் போல் நடத்தப்பட்டது. அதை ஊடகங்களுக்கு சொல்ல முடியாது. ஊடகங்களில் சொன்னால் அதிமுகதான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்று இப்போதே பரபரப்பாகி விடும்.

ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்… சீனியர்களிடம் எடப்பாடி உருக்கம்

ஒரு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்… திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று சொன்னவர்களில் நூறு பேரில் ஏழு பேர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று அந்த எக்சிட் போல் மூலம் தெரியவருகிறது. எக்சிட் போலில் பங்கேற்றவர்களில் ஏழு சதவீதம் பேர் திமுகவுக்கு என்று சொல்லி இருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் என்று நமக்கு தெரிய வந்துள்ளது. அப்படிப் பார்த்தோமேயானால் நமக்கு 120 இடங்கள் கிடைப்பது என்பது உறுதி. நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கவலைப்படாமல் வாக்கு எண்ணிக்கை களத்தில் கவனமாக பணியாற்ற தயாராகி விடுங்கள் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

இதன் பின்னர் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தவே, ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து முடிவு எடுத்துதான் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். 2016 சட்டமன்ற தேர்தலிலும் கூட அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிமுகவின் வெற்றியைப் பற்றிச் சொல்லவே இல்லை. மாற்று அணி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முதல் நாள் வரைக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் நடந்தது என்னவோ வேறு. அப்படித்தான் இந்த தேர்தலும் என்று அறிக்கை விடுத்திருக்கின்றனர்.