’’அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்..’’-அமைரா தஸ்தூர்

 

’’அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்..’’-அமைரா தஸ்தூர்

நடிகர் தனுஷ் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். கே.வி.ஆனந்தின் மறைவு குறித்து இவ்விருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் இரங்கல் விடுத்துள்ளனர்.

’’அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்..’’-அமைரா தஸ்தூர்

அதில், ‘’ஒரு மென்மையான, நேர்மையான மனிதர் காலமானார். மிகுந்த அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த மிக இனிமையான மனிதர், K.V.ஆனந்த் சார். மிக விரைவில் சென்றுவிட்டீர்கள் சார். குடும்பத்தினருக்கு எனது இரங்கல்.’ என்று தெரிவித்திருக்கிறார் தனுஷ்.

’’அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்..’’-அமைரா தஸ்தூர்

’’நீங்கள் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் என்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினீர்கள். அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். நீங்கள் இல்லாத சினிமா ஒரு மாதிரியாக இருக்கிறது. அமைதியாக ஓய்வெடுங்கள் சார் ’’என்று தெரிவித்திருக்கிறார்.