’’சீமான் சார்…சத்தியமா நீங்கள் இல்லை ’’- திமுக நிர்வாகி அடித்த கமெண்ட்

 

’’சீமான் சார்…சத்தியமா நீங்கள் இல்லை ’’- திமுக நிர்வாகி அடித்த கமெண்ட்

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6ம் தேதியே வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், மேற்கு வங்க தேர்தல் 8 கட்டமாக நடைபெற்றதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்கத்தின் 8வது கட்ட தேர்தல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றதால் இரவு 7 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

’’சீமான் சார்…சத்தியமா நீங்கள் இல்லை ’’- திமுக நிர்வாகி அடித்த கமெண்ட்

இதில் டைம்ஸ் நவ் – சி வோட்டர் , ஆக்சிஸ் மை -இந்தியா டுடே, நியூஸ் -24 மற்றும் டுடே சாணக்யா, ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ், ஜான் கீ பாத் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணிதான் அதிக இடங்களில் வெல்லும் என்று சொல்லி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக அதிமுக 70 இடங்கள் வரை வெல்லும் பெருமபாலான கருத்துக்கணிப்புகளும், 123 இடங்கள் வரைக்கும் வெல்லும் என்று ஜான் கீ பாத் எக்ஸிட் போலும் சொல்லியது.

’’சீமான் சார்…சத்தியமா நீங்கள் இல்லை ’’- திமுக நிர்வாகி அடித்த கமெண்ட்

சில கருத்துக்கணிப்புகளில் அமமுக, மநீம தலா 2 இடங்களை பெறும் என்றும், தலா ஒரு இடங்களை பெறும் என்றும் சொல்லி இருக்கின்றன. ஆனால், எந்த ஒரு கருத்துகணிப்புகளிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பற்றி குறிப்பிடவில்லை. சில கருத்துக்கணிப்புகளில் மற்ற கட்சிகள் என்று 1 சீட் முதல் 7 வரைக்கும் வர வாய்ப்பிருக்கிறது என்று சொல்கின்றன.

இந்நிலையில், அந்த மற்ற கட்சிகள் நீங்கள்( நாம் தமிழர் சீமான்) இல்லை என்று சொல்லி இருக்கிறார், நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த ராஜீவ்காந்தி.

அவர், ’’மற்றவை சத்தியமா நீங்கள் இல்லை @SeemanOfficial sir..’’என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.