மே மாத புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

 

மே மாத புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே மாத ஊரடங்கு மற்றும் மே மாத கட்டுப்பாடுகள் தொடர்பாகவும், பாதிப்பு அதிகமிருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

மே மாத புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. ஆகையால் மாவட்டங்களின் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தைக் கேட்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று முடிவு எடுத்திருக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் அடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இருக்கின்றன. ஏற்கனவே விதித்த கட்டுப்பாடுகளில் இரவு நேர ஊரடங்கு, வாரத்தின் கடைசி நேர ஊரடங்கு , திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய ஆலோசனைக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதும் தெரியவருகிறது.