பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து… கனிமொழி முன்வைக்கும் கோரிக்கை

 

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து… கனிமொழி முன்வைக்கும் கோரிக்கை

ஆசிரியர்கள் தேர்தல் பணியை இந்த பெருந்தொற்று காலத்திலும் கடும் சவால்களுக்கு இடையே செய்து முடித்துள்ளனர். இதில் பலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து… கனிமொழி முன்வைக்கும் கோரிக்கை

கொரோனா காலத்திலும் தேர்தலில் வாக்குப்பதிவின்போது ஆசிரியர்கள் பணிபுரிந்துள்ளனர். அடுத்து வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவதற்கும் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி பரிசோதனைகள் செய்த பின்னர்தான் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை பணியில் அமர்த்த முடிவு செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கனிமொழி எம்.பி. இந்த கோரிக்கையினை முன் வைத்திருக்கிறார்.