விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன ஸ்டாலின்

 

விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன ஸ்டாலின்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன ஸ்டாலின்

நடிகர் விவேக் மாரடைப்பினால் கடந்த 17ம் தேதி அன்று மறைந்தபோது, ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சென்றிருந்தார். இதனால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. கொடைக்கானலில் இருந்து உடனடியாக புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின், விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார். திமுக நிர்வாகிகள் பலரும் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கொடைக்கானலில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பிய ஸ்டாலின், விவேக் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

விவேக் மறைந்த தினத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தாலும், அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்றும் ஸ்டாலின் ஆறுதல் கூறியிருக்கிறார்.