மிரட்டல் போன்கால்…சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய பரபரப்பு பின்னணி

 

மிரட்டல் போன்கால்…சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய பரபரப்பு பின்னணி

நான் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பும்போது அழுத்தமாக சொன்ன சசிகலா, சென்னை வந்த பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்க போகிறேன் என்று அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது அவரது ஆதரவாளர்களுக்கு. சசிகலாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வந்தனர்.

மிரட்டல் போன்கால்…சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய பரபரப்பு பின்னணி

சசிகலாவின் அந்த முடிவுக்கு காரணமான பரபரப்பு பின்னணி குறித்த விவரங்கள் தற்போது இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியிலிருந்து போன் செய்த அந்த அமலாக்கத்துறை அதிகாரி 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துக்களை பினாமி மூலமாக நீங்கள் வைத்திருக்கும் விஷயம் புள்ளி விவரமாக எங்ககிட்ட இருக்குது. உங்க மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கு என்று சொல்ல, ’’இதைப்பற்றி நான் சொத்துக்குவிப்பு வழக்கில் கோர்ட்டில் விளக்கமாக சொல்லி விட்டேன். அந்த சொத்துக்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டேன்’’ என அதிரடியாக சொல்ல,

பதிலுக்கு அந்த அதிகாரி, ’’அந்த பினாமி சொத்துகள் குறித்து ஃபுல் டீடெயிலாக எங்களிடம் தகவல் இருக்கு. இதிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள ஒரே ஒரு வழி இருக்கிறது. அரசியலிலிருந்து நீங்கள் ஒதுங்கிக் கொண்டால் உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. இல்லை என்றால் உங்கள் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டியிருக்கும்’ என்று சொல்ல.

மிரட்டல் போன்கால்…சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய பரபரப்பு பின்னணி

’’என்ன மிரட்டுகிறார்களா? நான் ஜெயிலை பார்த்துவிட்டேன். உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுவேன் என நினைக்காதீர்கள்’’என்று ஆத்திரமாக சொல்லிவிட்டாலும், அதன் பின்னர் தனது சட்ட நிபுணர்களுடன் இது குறித்து ஆலோசித்து இருக்கிறார் சசிகலா. அமலாக்கத் துறை விசாரணை என்று போனால் அப்புறம் கைது என்று ஆகிவிடும். வழக்கையும் அவர்கள் சீக்கிரத்தில் முடிக்க மாட்டார்கள் இழுத்தடிப்பார்கள் ரொம்ப சிக்கலாகிவிடும் என்று சொல்ல,

மறுபடியும் சிறையா? என்று யோசித்த சசிகலா, வேறுவழியின்றி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவசரமாக அறிவிக்க முடிவு முடிவெடுத்துள்ளார் சசிகலா. ஆனால் அதற்குள், டெல்லியில் இருந்து பேசிய அந்த அதிகாரி, சசிகலா ஒத்துவரவில்லை என்று தகவல் சொல்ல, அவருக்கு அமலாக்கத் துறையின் மூலம் சம்மன் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. அதன்படி சசிகலாவுக்கு சம்மனும் அனுப்பப்பட்டு இருக்கிறது.

மிரட்டல் போன்கால்…சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய பரபரப்பு பின்னணி

அன்றையதினம் திடீரென்று அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். இதனால், சசிகலாவுக்கு அனுப்பப்பட்ட அந்த சம்மனை அவருக்கு சென்று விடாதபடி தடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. போஸ்டல் மூலமாகத்தான் அந்த சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. சென்னை அண்ணா சாலை தலைமை அலுவலகம், செயின்ட் தாமஸ் மவுண்ட் தபால் அலுவலகம் சென்று இரவோடு இரவாக அலைந்து சசிகலாவுக்கு சென்றுவிடாமல் அந்த சம்மனை கைப்பற்றியிருக்கிறது அமலாக்கத்துறை.