இந்த மாவட்டத்தில் மட்டும் ஒருவாரம் முழு ஊரடங்கு

 

இந்த மாவட்டத்தில்  மட்டும் ஒருவாரம் முழு ஊரடங்கு

இந்தியாவில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3, 52, 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1,73,13,163 என்று மொத்த பாதிப்பு உயர்ந்திருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 2,812 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரைக்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த மாவட்டத்தில்  மட்டும் ஒருவாரம் முழு ஊரடங்கு

கொரோனா தொற்றின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்து, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. சடங்களை எரிக்க டோக்கன் முறையும், கியூவில் நிற்கும் அவலமும் ஏற்பட்டிருக்கிறது. சடலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடிக்கி வைத்து எரிக்கும் அவலமும் ஏற்பட்டிருக்கிறது.

உத்தரகாண் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,368 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 44 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இம்மாநிலத்தில்35,864 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. 2,164 என்று இறப்பின் எண்ணைக்கையும் உயர்ந்திருக்கிறது.

இந்த மாவட்டத்தில்  மட்டும் ஒருவாரம் முழு ஊரடங்கு

மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரத்தை கண்டு, அதை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அலுவலகங்கள் ஏப்ரல்23ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரைக்கும் இயங்க தடை அமலில் உள்ளது.

மாநிலத்தில் பவுரி மாவட்டத்தில் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால், அம்மாவட்டத்தில் மட்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்று இரவு 7 மணி முதல் மே3ம் தேதி அதிகாலை 5 மணி வரையிலும் இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் ஸ்வர்காஷ்ரம் , லக்‌ஷ்மஞ்சூலா கோட்வார் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டேராடூன் மாவட்டம், ஹால்ட்வானி மாநகராட்சி, லல்குவான் நகர் பஞ்சாயத்து, நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.