முதல்வர் கூட்டத்திற்கு வைகோ ,திருமா ,சீமான், கமலுக்கு ஏன் அழைப்பு இல்லை?

முதல்வர் கூட்டத்திற்கு வைகோ ,திருமா ,சீமான், கமலுக்கு ஏன் அழைப்பு இல்லை?

உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கலாமா? அல்லது ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்தலாமா? என்று ஆலோசித்து முடிவெடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 9 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்வர் கூட்டத்திற்கு வைகோ ,திருமா ,சீமான், கமலுக்கு ஏன் அழைப்பு இல்லை?

இக்கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 8 கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாஜக சார்பில் எல்.முருகன், திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் கூட்டத்திற்கு வைகோ ,திருமா ,சீமான், கமலுக்கு ஏன் அழைப்பு இல்லை?

இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இக்கட்சிகளை புறக்கணித்துள்ளதால், ‘’ஆட்சியிலிருந்து போகவிருக்கும் அதிமுக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டங்கள் நடத்துவதில் இதுவரை அது கடைபிடித்த நடைமுறையைக் கைவிட்டு இப்போது எட்டு கட்சிகளை மட்டும் கூட்டி கூட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் பாஜகவின் முடிவை தமிழக மக்கள்மீது திணிப்பது சரியல்ல’’என்று தனது கண்டனத்தை தெரிவிக்கிறார் விசிக எம்.பி. ரவிக்குமார்.

kamal