வெளியூரில் இருந்து நெல்லைக்கு வந்த 25,000 பேர்! – கொரோனா பீதியில் மக்கள்

 

வெளியூரில் இருந்து நெல்லைக்கு வந்த 25,000 பேர்! – கொரோனா பீதியில் மக்கள்

சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களில் 14,600 பேர் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சொந்த ஊர் திரும்பும் மக்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. திருமணம், மரணம், மருத்துவ அவசர நிலை உள்ளிட்ட சில காரணங்களுக்கு மட்டுமே இபாஸ் வழங்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக வாழ வழியின்றி சொந்த ஊர் திரும்ப மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பலரும் கிராம சாலைகள் வழியாக, காடுகள், விவசாய நிலங்கள் வழியாக மாவட்ட எல்லையைக் கடந்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.

வெளியூரில் இருந்து நெல்லைக்கு வந்த 25,000 பேர்! – கொரோனா பீதியில் மக்கள்
இப்படி நெல்லை மாவட்டத்துக்குள் மட்டும் கடந்த சில நாட்களில் மட்டும் 14,640 பேர் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உரிய அனுமதி, பரிசோதனையின்றி ஊருக்குத் திரும்பியவர்களால் கொரோனா பரவலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் உள்ளது.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் நெல்லை திரும்பியது குறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து நெல்லைக்குத் திரும்புகிறவர்கள், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறார்கள். கடந்த 21ம் தேதி வரை வெளிநாட்டில் இருந்து 640 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து 11,200 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து 11,640 பேரும் நெல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த 21ம் தேதி வரை 640 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 448 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 198 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.
கண்காணிப்புக்குப் பிறகு கிராமங்களுக்கு அனுமதிக்கப்பட்டால் சரி, முறையான அனுமதியின்றி கிராமங்களுக்கு திரும்பியவர்கள் மூலமாக கிராமங்களிலும் கொரோனா பரவல் ஏற்படலாம். இதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.