குண்டாற்று பகுதியில் 2500 கிலோ நைட்ரேட் தீயிட்டு அழிப்பு!

 

குண்டாற்று பகுதியில் 2500 கிலோ நைட்ரேட் தீயிட்டு அழிப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெபனான் நாட்டின் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர், கரூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு சென்னை துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

குண்டாற்று பகுதியில் 2500 கிலோ நைட்ரேட் தீயிட்டு அழிப்பு!

லெபனான் நாட்டை போல சென்னையிலும் விபத்து நடக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதனை அப்புறப்படுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டது. அம்மோனியம் நைட்ரேட் அனைத்தும் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு விபத்தை தவிர்க்கும் பொருட்டு தமிழகத்தில் இருந்து அமோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ராமநாதபுரம் கமுதி தனி ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த 2,500 கிலோ எடை கொண்ட பொட்டாசியம் நைட்ரேட் அழிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு இலங்கைக்கு கடத்தி முயன்ற 2,500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆயுதப்படையில் பாதுகாத்து வைத்திருந்தனர். நைட்ரேட்டை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், குண்டாற்று பகுதிக்கு நைட்ரேட் கொண்டு செல்லப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.