வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டதால் அரசுக்கு ரூ.2,500 கோடி வருவாய்!

 

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டதால் அரசுக்கு ரூ.2,500 கோடி வருவாய்!

வந்தே பார்த் திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்டதால் அரசுக்கு ரூ.2,500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த மார்ச் 23ம் தேதி சர்வதேச விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள் அங்கேயே சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்தியர்களை மீட்டுச் செல்லுமாறு பிற நாடுகள் கோரிக்கை விடுத்ததன் பேரில், கடந்த மே மாதம் வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டதால் அரசுக்கு ரூ.2,500 கோடி வருவாய்!

இத்திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் மூலமாக, 11 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர். அதுமட்டுமில்லாமல் சுமார் 1.5 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், மே மாதம் தொடங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக ஏர் இந்தியாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் ரூ.2,500 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை விமான சேவை என்பது நினைவு கூரத்தக்கது.