பெண்களால் முடியாதது எதுவும் இல்லை.. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மலையை வெட்டி கால்வாய் ஏற்படுத்திய பெண்கள்

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை.. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மலையை வெட்டி கால்வாய் ஏற்படுத்திய பெண்கள்

மத்திய பிரதேசத்தில் கிராமத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க, பெண்களாக இணைந்து மலையிலிருந்து தண்ணீர் குளத்துக்கு செல்லும் வகையில் கால்வாய் வெட்டிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகி பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் அங்கிரோதா கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த கிராமத்துக்கு அருகில் ஒரு மலை உள்ளது. அந்த மலையில் தண்ணீர் தாராளமாக ஒடுகிறது. ஆனால் அந்நீரை அந்த கிராமத்தினரால் பயன்படுத்த முடியவில்லை. அந்த கிராமத்தில் உள்ள குளத்துக்கு மலையிலிருந்து நீர்வழித்தடம் அமைத்தால் அங்கியிருந்து குளத்துக்கு தண்ணீர் வரும். அதனால் அந்த கிராமத்தில் உள்ள மக்களின் நீர் பிரச்சினை முடிவுக்கு வரும்.

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை.. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மலையை வெட்டி கால்வாய் ஏற்படுத்திய பெண்கள்
மலையில் கால்வாய் வெட்டும் பெண்கள்

இதனால் கிராமத்தில் உள்ள பெண்கள் ஒரு குழுவை அமைத்து, மலையை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வெட்டி குளத்துக்கு தண்ணீர் விழ வழி செய்வது என அந்த கிராமத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து சுமார் 250 பெண்கள் இணைந்து கடந்த 18 மாதங்களாக மலையை வெட்டி குளத்துக்கு நீர் செல்லும் வகையில் கால்வாயை உருவாக்கினர். பெண்களின் இந்த விடா முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை.. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மலையை வெட்டி கால்வாய் ஏற்படுத்திய பெண்கள்
பெண்கள் வெட்டிய கால்வாய்

அங்கிரோதா கிராமத்தை சேர்ந்த விவிதாபாய் ஆதிவாசி கூறுகையில், எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் எங்களுக்காகவே நாங்கள் இதனை செய்கிறோம். தண்ணீர் பற்றாக்குறையால் எங்களால் விவசாயம் செய்யமுடியவில்லை, கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. கிராமத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக பெண்கள் மலையை வெட்டி வழியை ஏற்படுத்துகிறார்கள். இந்த வேலையை முடிக்க எங்களுக்கு 18 மாதங்கள் பிடித்தன என தெரிவித்தார். மற்றொரு கிராமவாசி கூறுகையில், பெண்கள் தற்போது நீர் வழித்தடத்தின் பாதையில் உள்ள கற்களை அகற்றும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.