250 ரூபாய் பிரியாணி 75% தள்ளுபடி போக பில் 40,000 ரூபாய்! அடடே ஆன்லைன் ஆர்டர்!

 

250 ரூபாய் பிரியாணி 75% தள்ளுபடி போக பில் 40,000 ரூபாய்! அடடே ஆன்லைன் ஆர்டர்!

நீங்களா இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க? போடா லூசு பையா 76 ரூபாய் ட்ரான்சாச்ஷனே நக்கிட்டுப் போயிடுச்சு, எப்புடி திரும்பவும் 5000 உன் சர்வீஸை நம்பி போடுறதுனுதானே நெகட்டிவா யோசிச்சு இருப்பீங்க? ஆனா பிரியா அப்படியில்ல. நல்ல மனசுக்காரர்.

சென்னை செளகார்பேட்டையச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா, புதியதாக ஸ்மார்ட்போன் வாங்கியிருக்கிறார். ஸ்மார்ட்போன் கையில் வந்ததும், இதுநாள்வரை கேள்விபட்ட அத்தனை மொபைல் ஆப்களையும் வரிசையாக இன்ஸ்டால் செய்திருக்கிறார். உணவை வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யும் பிரபல ஆப்பும் அதில் ஒன்று. ஆனால், அது பிரபல ஆப் அல்ல, மிகப்பெரிய ‘ஆப்பு’ என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டிருக்கிறார் பிரியா. காமெடி, நடந்தது என்ன?

Online Briyani

உணவக ஆப்பில், 250 ரூபாய் பிரியாணியை தள்ளுபடியில் வெறும் 76 ரூபாய்க்கு டோர் டெலிவரி செய்கிறோம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்திருக்கிறார். ஸ்மார்ட்போன் வாங்கியதை கொண்டாடியே தீர்த்துவிடுவது என்ற முடிவுடன், பிரியாணிக்கி ஆர்டர் கொடுத்து, கத்திரிக்கா கொத்சு கூடுதலாக ரெண்டு பாக்கெட் கேட்டிருக்கிறார். காசை எடுத்துக்கொண்டாலும், ஆர்டர் அக்செப்ட் ஆகவில்லை. அடடா, ஏதோ தவறு நடந்துவிட்டது என்றெண்ணி, உடனடியாக ஆன்லைனில் அந்த ஆப்பின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண்ணை தேடியிருக்கிறார். உடனடியாக ஒரு எண் கிடைத்துவிட்டது.

Customer care executive

அந்த எண்ணுக்கு போன் போன ரெண்டாவது ரிங்கிலேயே கஸ்டமர் கேர் எக்ஸ்கியூட்டீவ் லைனில் வந்து, “வணக்கம், நான் எவ்வாறு தங்களுக்கு உதவலாம்?” என்று கேட்க, அடடா என்னா ஸ்பீடா இருக்காய்ங்க என்று நினைத்த பிரியா, “இந்தமாதிரி ஆர்டர் பண்ணினேன், பிரியாணியும் வரல காசும் திரும்ப வரல, சந்தைக்குப் போவோணும் ஆத்தா வையும் காசு ரீஃபண்ட் பண்ணுங்க‌” எனச் சிணுங்க‌, “76 ரூபாய் எல்லாம் ரீஃபண்ட் பண்ண முடியாது மேடம், அதுக்கு சர்வீஸ் சார்ஜ் 50, ஜிஎஸ்டி 80 ரூபாய் போச்சுன்னா, ரீஃபண்ட் கேட்டதுக்கு நீங்கதான் எங்களுக்கு திரும்பவும் பணம் தர வேண்டியிருக்கும்” என சொல்ல, “ஐய்ய்யோ அப்போ அந்த 76 ரூபா போனது போனதுதானா? காசு வராதா” என கேட்க, பிரியாவின் பிரச்னையை கனிவோடு கவனித்துக் கேட்ட அந்த எக்ஸ்கியூட்டிவ் சிம்ப்ளா ஒரு பதிலைச் சொல்கிறார். பட், அந்த டீலிங் பிரியாவுக்கு ரொம்ப  பிடித்துவிடுகிறது. டீல் என்ன? “மேடம், வெறும் 76 ரூபாயை எல்லாம் ரீஃபண்ட் பண்ண முடியாது, ரீஃபண்ட் கட்டாயம் வேணும்னா எங்க அக்கவுன்ட்டுக்கு 5,000 ரூபாய் அனுப்புங்க. நாங்க உடனே அதை 5076 ரூபாயா திருப்பித் தந்தர்றோம்” என்பதுதன டீல்.

Phone scammer

நீங்களா இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க? போடா லூசு பையா 76 ரூபாய் ட்ரான்சாச்ஷனே நக்கிட்டுப் போயிடுச்சு, எப்புடி திரும்பவும் 5000 உன் சர்வீஸை நம்பி போடுறதுனுதானே நெகட்டிவா யோசிச்சு இருப்பீங்க? ஆனா பிரியா  அப்படியில்ல. நல்ல மனசுக்காரர். எக்ஸ்கியுட்டீவ் கேட்ட 5,000 அப்பா அக்கவுன்ட்டில் இருந்து அனுப்பியிருக்கிறார். “பணம் வந்துச்சா” என அவர் இங்கிருந்து கேட்க, “இன்னும் வரல” என அங்கிருந்து  சொல்ல, “திரும்பவும் 5,000 அனுப்பிவிட்டு “இப்ப வந்திருக்கும் பாருங்க” என பிரியா சொல்ல, “மேடம் வரவே இல்லீங்க மேடம்” என அவர் சொல்ல, இப்படியே 40,000 ரூபாய் வரைக்கும் அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறார் பிரியா.

Online scam

மொத்தமாக 40,000 ரூபாய் அனுப்பியும், பணம் வரவில்லை என்று எக்ஸ்கியூட்டீவ் சொன்னதைக்கேட்டு கவலையடைந்த பிரியாவுக்கு இப்போதுதான் லைட்டா சந்தேகம் வருகிறது. “சரி, உங்க ஆஃபிஸ் அட்ரஸ் சொல்லுங்க, நான் நேர்ல வந்து 5,000 குடுத்து 45,076 ரூபாயா வாங்கிக்கிறேன்” என்று சொல்லவும், எக்ஸ்கியூட்டிவ் உடனடியாக அட்ரஸை குறித்துக்கொள்ளச் சொல்லி அட்ரஸ் தந்திருக்கிறார். எக்ஸ்கியூட்டிவ் தந்த அட்ரஸ் இதுதான், “நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெய்ன்ரோடு, துபாய்” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். “ஆஹா இவ்வளவு நேரமும் களவாணி பய கூடதான் டீலிங் பேசிட்டு இருந்தோமா” என கண்ணை துடைத்துக்கொண்டே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார் பிரியா!