எல்.கே.ஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு: நாளை குலுக்கல்

 

எல்.கே.ஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு: நாளை  குலுக்கல்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

எல்.கே.ஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு: நாளை  குலுக்கல்

25 சதவீத இட ஒதுக்கீட்டின் படி 184 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தின் மூலம் 2792 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தகுதி படைத்த அனைத்து சான்றுகளுடன் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரரின் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

எல்.கே.ஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு: நாளை  குலுக்கல்

71 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனால் நாளை வியாழக்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு கல்வித்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் நடைபெற உள்ளது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் வீதம் காத்திருப்பு பட்டியல் உடன் வரும் 3ஆம் தேதி அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையில் ஒட்டப்படும்.

எல்.கே.ஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு: நாளை  குலுக்கல்

நாளை குலுக்கல் நாளன்று மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரில் எவரேனும் ஒருவர் கொரோனா சார்ந்த நடைமுறைகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து பங்கேற்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்திருக்கிறது.