செங்கள் சூளை உரிமையாளர்களின் போலி கணக்குகள்! 25 இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி ரெய்டு!

செங்கள் சூளை உரிமையாளர்களின் போலி கணக்குகள்! 25 இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி ரெய்டு!

கொரோனா ஊரடங்கின் காரணமாக செங்கல் விற்பனை மந்தம் என்றும், குறைவான விலைக்கே விலைபோயின என்றும் போலி கணக்கு காட்டிய செங்கல் சூளைகள் உரிமையாளர்களின் 25 இடங்களில் ஜி .எஸ். டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

செங்கள் சூளை உரிமையாளர்களின் போலி கணக்குகள்! 25 இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி ரெய்டு!

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தடாகம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தயாரிக்கப்படும் செங்கற்களின் விலை, கொரோனா காலத்தில் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், கொரோனா காலத்தில் செங்கல் விற்பனையாகவில்லை என போலியான கணக்குகளை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

செங்கள் சூளை உரிமையாளர்களின் போலி கணக்குகள்! 25 இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி ரெய்டு!

இந்த விவகாரம் ஜி.எஸ்.டி அதிகாரிகளில் கவனத்திற்கு வந்ததை அடுத்து, ஜி.எஸ்.டி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தடாகம் பகுதியில் உள்ள வி.கே.வி சேம்பர், மணி சேம்பர், விஷ்ணு சேம்பர், கே.கே.ஜி சேம்பர் மற்றும் வி.கே.வி சேம்பர் உரிமையாளர் சுந்தராஜ் வீடு, பெட்ரோல் பங்க் உட்பட 25 இடங்களில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சோதனை நடைபெறுவதை அடுத்து பணிக்கு வந்த ஊழியர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

செங்கள் சூளை உரிமையாளர்களின் போலி கணக்குகள்! 25 இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி ரெய்டு!

சோதனையின் போது செங்கல் சூளைகள் மற்றும் சூளை உரிமையாளர்களின் வீடுகளில் இருந்த ஆவணங்களை ஜி.எஸ்.டி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் சோதனையை நிறைவு செய்துள்ள ஜி.எஸ்.டி அதிகாரிகள், இன்று மாலை சோதனை குறித்த முழு விபரங்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 25 இடங்களில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது மற்ற செங்கல் சூளை அதிபர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.