25 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் முதல்வர் முன்வைத்த 30 கோரிக்கைகள்

 

25 நிமிட சந்திப்பில் பிரதமரிடம்  முதல்வர் முன்வைத்த 30 கோரிக்கைகள்

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

25 நிமிட சந்திப்பில் பிரதமரிடம்  முதல்வர் முன்வைத்த 30 கோரிக்கைகள்

25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த 25 நிமிட சந்திப்பின்போது, தமிழக நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பிரதமரிடம் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும், சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் அந்த மனுவில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

25 நிமிட சந்திப்பில் பிரதமரிடம்  முதல்வர் முன்வைத்த 30 கோரிக்கைகள்

மேலும், கொரோனா பேரிடர் நிதி, கருப்பு பூஞ்சை மருந்து, ஜி.எஸ்.டி. தொகை குறித்தும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். நேரிலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினார் முதல்வர்.

இந்த சந்திப்பிற்கு பின்னர், பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் முதல்வர்.