Home அரசியல் கம்யூனிஸ்டுக்கு 25 கோடி, கொங்கு ஈஸ்வரனுக்கு 15 கோடி...அடுத்த கட்சியின் ஆட்களை ஆடு,மாடுகளை விலைபேசி முடிப்பது போல..திமுகவை கடுமையாக சாடிய அதிமுக

கம்யூனிஸ்டுக்கு 25 கோடி, கொங்கு ஈஸ்வரனுக்கு 15 கோடி…அடுத்த கட்சியின் ஆட்களை ஆடு,மாடுகளை விலைபேசி முடிப்பது போல..திமுகவை கடுமையாக சாடிய அதிமுக

மரணக்குழியிலும் ஊழல் நாற்றம் என்று அதிமுகவை கடுமயாக விமர்சித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் கடும் கண்டனம் தெரிவித்து கட்டுரை தீட்டியிருக்கிறார் குத்தூட்டி.

’’அடித்து வைத்திருக்கும் லட்சோப லட்சம் கோடிகளான அலைக்கற்றை பணத்தை வைத்து அரசியல் கட்சிகளையே கூட்டணிக்கு விலைபேசி முடித்த யோக்கியர் ஸ்டாலின், மக்களை மட்டுமே நம்பி நடக்கும் மகோன்னத இயக்கமாம் கழகத்தை விரல் நீட்டி குற்றம் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?’’என்று காட்டமாக கேட்கும் குத்தீட்டி,

’’கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு 25 கோடி, கொங்கு ஈஸ்வரனுக்கு 15 கோடி என்று ஒவ்வொரு கட்சிக்கும் விலைப்பட்டியல் வைத்து ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியது திமுகதானே’’என்கிறார்.

’’திருமங்கலம் தேர்தல் பார்முலா என்று வறிய மக்களின் வாக்குகளை விலைபேசுகிற கலாச்சாரத்தை இந்தியாவுக்கே அறிமுகம் செய்த இழிவான இயக்கமும் திமுகதானே’’ என்று கேட்கும் அவர், ‘’கறி விருந்து நடத்தி மதுபாட்டில்களை விநியோகம் செய்து, கையூட்டு கொடுத்து ஏழை, எளிய மக்களின் வாக்குகளை விலைபேசுகிற இழிவையும், மலிவையும் இந்நாட்டுக்கே அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தானே’’என்று சொல்லும் குத்தீட்டி,

‘’அடுத்த கட்சியின் ஆட்களை ஆடு,மாடுகளை விலைபேசி முடிப்பது போல மணப்பாறை மாட்டுச்சந்தை மாதிரி மக்கள் பிரதிநிதிகளை ஏலம் எடுத்து திமுகவுக்கு இழுத்து வருகிற கேவலத்தை செய்ததும் இவர்கள் அல்லவா? இப்படி முதுகெல்லாம் அழுக்கை சுமந்துகொண்டு கழகம் என்கிற அப்பழுக்கில்லா இயக்கத்தின் மீது அவதூறு பரப்பிட மு.க.ஸ்டாலின் செய்கிற முயற்சிகள்நிலவை களங்கப்படுத்தசேறு அள்ளி வீசுகிற கோமாளிகாரியம்’’என்கிறார்.

மேலும், ஜனநாயகத்தை நம்பி சாதனைபடைக்கின்ற சரித்திர பெட்டகம் அதிமுக. திமுக போல் பணநாயகத்தை நம்புவதும்,அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவது என்கிற ஜனநாயகத்திற்கு எதிரான கேவலங்கள் அனைத்துமே திமுகவுக்கே உரிய கறை படிந்த வரலாறு’’என்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அண்ணாத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி,...

போராட்டம்னு வந்துட்டா… பேரணியில் சிங்க நடை போடும் பாட்டி!

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிய விவசாயிகள் பேரணியில் மூதாட்டி ஒருவர் கம்பீரமாக நடந்துவரும் வீடியோ வைரலாகியிருக்கிறது. இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்களின் போராட்டக்குணம் சற்றே...

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ஸ்டாலின் தான் அதுக்கு சேர்மேன்’ – முதல்வர் கடும் விமர்சனம்!

திமுகவில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகள் தின நாளில்...

குடியரசு தலைவர் திறந்தது நேதாஜி படமா? நேதாஜி ரோலில் நடித்தவரின் படமா?

குடியரசு தலைவர் திறந்துவைத்தது நேதாஜியின் படமா அல்லது கும்னாமி என்ற திரைப்படத்தில் நேதாஜியாக நடித்தவரின் படமா என்ற விவாதம் ட்விட்டரில் எழுந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்...
Do NOT follow this link or you will be banned from the site!