Home தமிழகம் '25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி'... உரிமையாளருக்கு பட்டை நாமம் போட்ட பொதுமக்கள்!

’25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி’… உரிமையாளருக்கு பட்டை நாமம் போட்ட பொதுமக்கள்!

கடையை விளம்பரப்படுத்த வேண்டும் முயற்சியில் வலைத்தளங்கள் மற்றும் வால் போஸ்டர்கள் மூலமாக நூதனமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது

வேலூர் ஆரணி ரோடு சாலையில் நேற்று புதிதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. கடையை விளம்பரப்படுத்த வேண்டும் முயற்சியில் வலைத்தளங்கள் மற்றும் போஸ்டர்கள் மூலமாக நூதனமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் காலை 11 மணி முதல் 12 மணி வரை பழைய 25 பைசா நாணயத்தைக் கொண்டுவரும் நபருக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.  

ttn

’25 பைசாவா அதெல்லாம் தூக்கி போட்டு  எத்தனை காலம் ஆகுது.  எப்படிப்பா  அது இப்போ இருக்கும். அதனால யாரும் வர மாட்டாங்க’  என்று யோசித்து அறிவிப்பு வெளியிட்ட கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம் மக்கள் கூட்டம் பழைய 25 பைசா நாணயத்துடன் காலை 10 மணிக்கே கடை முன் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கினர். இதை கண்டு அதிர்ந்த கடை உரிமையாளர்  வேறுவழியின்றி 200 பேருக்கு மட்டும் 25 பைசா நாணயத்தைப் பெற்றுக்கொண்டு பிரியாணி வழங்கினார்.

ttn

இதுகுறித்து கூறியுள்ள அவர், ‘பழைய நாணயங்களை மக்களுக்கு நினைவூட்டவே இப்படி அறிவித்தேன். ஆனால்  இவ்வளவு  பேரிடம் 25 பைசா இருப்பது இன்று தான் தெரிந்தது’ என்றார். 

Most Popular

’’நாராயணசாமி நாவடக்கணும்; எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளணும்’’- வையாபுரி மணிகண்டன் எச்சரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்கட்சியின் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு...

விவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது!

விவசாய மசோதாவை எதிர்த்து மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்… பெண்களைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

“விண்ணை நோக்கி எகிறிக் கொண்டு போகும் தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”,...

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்...
Do NOT follow this link or you will be banned from the site!