25ம் தேதி பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் !

 

25ம் தேதி பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் !

இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் அமெரிக்காவின் செயற்கைகோள்களுடன் இம்மாதம் 25ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் அமெரிக்காவின் செயற்கைகோள்களுடன் இம்மாதம் 25ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) தயாரித்திருக்கும் இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் ஆகும். வரும் 25ம் தேதி விண்ணில் ஏவப்படும் இந்த செயற்கைக்கோள், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மிக மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும் படம் பிடித்து அனுப்பும் திறன்களைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bslv

அதி துல்லியமாக  எதிரி நாடுகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் மிகத் தெளிவாக ஜூம் செய்து படம் பிடிக்கும் திறன்களைக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணில் இந்த ராக்கெட் ஏவுவதற்கான கவுண் ட்வுன் இம்மாதம் 23ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது ராக்கெட்டை பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.