“விவசாயிகள் பம்புசெட்டுக்கு 24X7 மும்முனை மின்சாரம்” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

“விவசாயிகள் பம்புசெட்டுக்கு 24X7 மும்முனை மின்சாரம்” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

“விவசாயிகள் பம்புசெட்டுக்கு 24X7 மும்முனை மின்சாரம்” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பல்லடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், ” விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். நான் புள்ளி விவரத்துடன் பேசுகிறேன். மக்களை பற்றி கவலைப்படாத கட்சி திமுக; மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது திமுக என்ன செய்தது? 1100 என்ற எண்ணில் குறைகூறி தீர்வு காணும் திட்டம் ஸ்டாலின் சொல்லி நான் அறிவிக்கவில்லை” என்றார்.

“விவசாயிகள் பம்புசெட்டுக்கு 24X7 மும்முனை மின்சாரம்” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடனை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.