பாஜக அழுத்தத்திற்கு பணிந்த ரங்கசாமி: 24 நாட்கள் இழுபறிக்கு பின்னர் உடன்பாடு

 

பாஜக அழுத்தத்திற்கு பணிந்த ரங்கசாமி: 24 நாட்கள் இழுபறிக்கு பின்னர் உடன்பாடு

புதுச்சேரியில் அமைச்சரவை பங்கீடு தொடர்பான பாஜக அழுத்தத்திற்கு பணிந்தா முதல்வர் என் .ரங்கசாமி என்று, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை கொடுக்க அவர் சம்மதித்துள்ளதாகவும், 24 நாட்கள் இழுபறிக்கு பின்னர் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையேயான உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி பெருமுச்சு விடுகின்றனர் என்றும் தகவல்.

பாஜக அழுத்தத்திற்கு பணிந்த ரங்கசாமி: 24 நாட்கள் இழுபறிக்கு பின்னர் உடன்பாடு

3 அமைச்சர்கள், சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தது பாஜக. ஆனால், 2 அமைச்சர் பதவிக்கு மேல் கொடுக்க முடியாது என்று கறார் காட்டி வந்தார் ரங்கசாமி. புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் பதவியை விட்டுத்தரக்கூடாது என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் பாஜகவிற்கு புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் பதவியை தரமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

இதனால் புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பொறூப்பேற்றும், பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையேயான இந்த பேச்சுவார்த்தை இழுபறியினால் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாமல் மக்கள் அவதிப்படும் அவலம் இருந்து வந்தது. தற்போது பாஜக அழுத்தத்தினால் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் பதவியை விட்டுத்தர ரங்கசாமி சம்மதித்துள்ளதால் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையேயான உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி பெருமுச்சு விடுகின்றனர் என்றும் தகவல்.

பாஜக அழுத்தத்திற்கு பணிந்த ரங்கசாமி: 24 நாட்கள் இழுபறிக்கு பின்னர் உடன்பாடு

பாஜக பொதுச்செயலாளர் சி.டி. ரவி வரும் வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரி வருகிறார் என்றும், அவர் ரங்கசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அன்றய தினமே புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது என்றும் தகவல்.

அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடும் அன்றைய தினமே பேசி முடிவு செய்யப்பட இருக்கிறது என்றும், இதையத்து புதுச்சேரி அமைச்சர்கள், சபாநாயகர் பதவியேற்பினை அடுத்த வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல்.