உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தம்: முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

 

உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தம்: முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்திலும் உயிர்ப்பலிகள் தொடரும் நிலையில் வட இந்தியாவில் கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் தங்களது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டபோது, தமிழக அரசு வழக்கறிஞர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதனால் அந்த ஆலையை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தம்: முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

இதில் அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையும் இல்லை. தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் இருகிறது. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கவலை கொள்ளச் செய்கிறது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க ஒரு நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பது என்பது சரியானது அல்ல என்று நீதிபதி சொன்னதும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஆதரவு என்பதே இல்லை. எதிர்ப்புக்குரல் தான் அதிகமாக இருந்தன என்று தமிழக அரசு வழக்கறிஞர் எடுத்துச் சொன்னதை, தலைமை நீதிபதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தம்: முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 26ஆம் தேதி அதாவது இன்றைக்கு ஒத்திவைத்தார். இன்றைக்கு காலை பதினொரு மணிக்கு மேல் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது.

அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டுமா அல்லது தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த அழுத்தத்தினால் பலரும் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தம்: முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவரத்தை பயன்படுத்தி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை குறுக்குவழியில் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் துறையை நாடுகிறது வேதாந்தா நிறுவனம். இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யாமல் காலம் கடத்தி விட்டு தமிழினத்தை பறிகொடுத்து ஆக்சிஜனை உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க இந்திய அரசு சதி செய்கிறது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 9 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளுக்காக டெல்லியும் காத்திருக்கிறது.