Home ஆன்மிகம் கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இதை செய்யுங்கள் போதும்!

கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இதை செய்யுங்கள் போதும்!

நம்மில் பலருக்கு கடன் இருக்கும். ஏதோ சில காரணங்களுக்காக கடன் வாங்கி அது காலப்போக்கி திரும்ப செலுத்த முடியாத அளவுக்கு கடன் பெருகிக்கொண்டே செல்கிறது என்ற கவலையில் உள்ளீர்களா ? கவலை வேண்டாம்…! இந்த செய்தியில் உள்ள பரிகாரங்களை படித்து அதன்படி நடந்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் கடன் குறையும் என்கிறது சாஸ்திரம்.

கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இதை செய்யுங்கள் போதும்!

*குலதெய்வ வழிபாடு

கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இதை செய்யுங்கள் போதும்!

கடன் தொல்லையிலிருந்து மீள குல தெய்வ வழிபாடு என்பது முக்கியமான ஒன்று. மூன்று பவுர்ணமி தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் படிப்படியாக குறையும் என்கிறது சாஸ்திரம். நிச்சயம் ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும். குலதெய்வ கோவில் வெகு தொலைவில் இருக்கிறது. அதனால் செல்ல முடியவில்லை என்று சொல்பவர்களும் அல்லது எங்களுக்கு குலதெய்வமே என்னவென்று தெரியாது என்று இருப்பவர்கள் நீங்கள் என்றால் கவலைப்படாதீர்கள்? ஐந்து முக விளக்கு வைத்து நெய் தீபம் ஏற்றி படையலிட்டு வழிபட வேண்டும். இப்படி ஒன்பது பவுர்ணமிகளில் நீங்கள் வழிபட்டு வந்தால் கட்டாயம் உங்களது கடன்கள் அடையும். அதேபோல் உங்களுக்கு யாரேனும் கடன் தர வேண்டும்; இழுபறியாகவே இருக்கிறது என்றாலும் கூட இதை நீங்கள் செய்தால் நிச்சயம் உங்களது கடன் பாக்கி வசூலாகும்.

*சக்கரத்தாழ்வார் வழிபாடு

கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இதை செய்யுங்கள் போதும்!

பெருமாள் கோவில்களில் வாசம் செய்து வரும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை சனி மற்றும் புதன் கிழமைகளில் வழிபாடு செய்யுங்கள். சக்கரத்தாழ்வார் சந்நிதியை 12 முறை வலம் வந்து துளசி மாலை சாத்தி வந்தால் நிச்சயம் உங்கள் கடன் தீரும்.

*கோமாதா வழிபாடு

கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இதை செய்யுங்கள் போதும்!

காலையில் விழித்ததும் பசுமாட்டை காணுங்கள். ஒரு முறையாவது பசுவுக்கு கீரையும் பழமும் கொடுங்கள்.

*குளிகை காலத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் குளிகை நேரத்தில் நீங்கள் வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் உங்கள் கடன் முழுவதும் அடைந்துவிடும். அதேபோல் நீங்கள் அடகு வைத்த நகையை வீட்டிற்கு மீட்டுக் கொண்டு வந்தால் அதை உடனே அணிந்து கொள்ளாமல் மஞ்சள் கலந்த நீரில் நன்றாகக் கழுவி, அதை ஒரு நாள் பூஜை அறையில் வைத்து பின்பு எடுத்து உபயோகிக்கலாம்.

*உங்கள் வீட்டை எப்போதும் தெய்வ கடாக்ஷமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களது சுற்றமும் செயலும் சிறந்ததாக இருக்கமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதை போல் கடன் தீரும் வரை உங்கள் பூஜை அறையில் அக்ஷயம் என எழுதி எழுதி வருவது நல்லது.

விநாயகர்

*சதுர்த்தி நாட்களில் தோரண கணபதிக்கு விளக்கேற்றி, நெய்வேத்தியம் வைத்து வழிபட்டு வந்தால் நிச்சயம் உங்கள் கடன் தீரும் என்பது ஐதீகம்.

*ருணவிமோசன பைரவர் வழிபாடு உங்கள் கடன்களை தீர்க்கும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் பிரதோஷ வழிபாடு எவ்வளவு பெரிய கடன்கள் இருந்தாலும் அதை படிப்படியாக குறைத்து விடும். சிவாலயத்திற்கு சென்று விளக்கேற்றி வருவதுடன் சிறிய சிவாலயத்திற்கு பித்தளை அல்லது வெண்கல விளக்கு வாங்கி கொடுக்கும் பட்சத்தில் உங்கள் கடன் முற்றிலுமாக ஒழிந்து விடும்.

*சஷ்டி விரதம் இருப்போர் கடன் சுமைகள் அனைத்தும் ஒழிந்து விடும் என்பது பெரியோர்களின் வாக்கு. அதனால் சஷ்டி கவசம் பாடி சஷ்டி விரதம் இருப்போர் கடன் நிச்சயம் முடிவுக்கு வரும்.

கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இதை செய்யுங்கள் போதும்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews