தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தச் சொல்லி டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பை ஏற்படுத்துவது ஏன்?

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தச் சொல்லி டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பை ஏற்படுத்துவது ஏன்?

வாக்கு எண்ணிக்கை இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும், நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும், ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தச் சொல்லி டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பை ஏற்படுத்துவது ஏன்?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவை சந்தித்த கிருஷ்ணசாமி, இந்த சந்திப்பின் போது அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ’’நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை யாரும் சாதாரணமாக பார்க்க கூடாது. இந்த முறை தமிழகத்தில் நடந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு வகையில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தச் சொல்லி டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பை ஏற்படுத்துவது ஏன்?

இதுவரைக்கும் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் முதல் முறையாக தேர்தல் நடைபெற்ற அன்று வாக்குச்சாவடிக்கு முன்பு கவுண்டர்கள் அமைத்து 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப் பட்டிருக்கிறது. மக்களின் வாக்குகளை பணத்தால் வாங்கி இருக்கிறார்கள். இது ஆபத்தான போக்கு. அதனால் இந்த தேர்தலை ஊழல் படுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தலாகத் தான் நான் பார்க்கிறேன். தேர்தல் ஆணையம் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தச் சொல்லி டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பை ஏற்படுத்துவது ஏன்?

மே இரண்டாம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பான எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்க கூடாது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை பற்றி விசாரிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும். இதன் பின்னர் நடைபெற்ற இந்த தேர்தலை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். அதன் பின்னர் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காகவது ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்’’ என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.