’’இந்த வசதியைப் பற்றி ஏன் மோடி அரசு வாய் திறக்க மறுக்கிறது? ’’

 

’’இந்த வசதியைப் பற்றி ஏன் மோடி அரசு வாய் திறக்க மறுக்கிறது? ’’

கடந்த வருடம் மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய Pressure Swing Adsorption oxygen generator வசதியை மோடி அரசு செய்திருந்தால் இன்று நெருக்கடி மோசமாகியிருக்காது. ரூ201 கோடியில் 162 வசதிகளை ஏற்படுத்துவதாக சொல்லிவிட்டு 8 மாதமாக டெண்டர்களை அறிவிக்கவில்லை.

இத்தனை நாட்கள் கடந்த பின் 162 மருத்துவமனைகளில் 33ல் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளும் குறைந்த அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. இத்தனை நாட்கள் மிக குறைந்த விலையில் சாத்தியப்படுத்திருக்கக் கூடிய உற்பத்தியை செய்ய தவறியது ஏன்? என்ற கேள்வியை எழுப்புகிறார் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

’’இந்த வசதியைப் பற்றி ஏன் மோடி அரசு வாய் திறக்க மறுக்கிறது? ’’

மேலும் அவர், நெருக்கடி உருவான பின் ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு வக்காலத்து ஏன் வாங்குகிறார்கள் பாஜக தலைவர்கள்? நெருக்கடியை பற்றி கடந்த வருடமே உணர்ந்தும், ஏன் அதற்குரிய வசதிகளை செய்யவில்லை என பாஜக சொல்வார்களா? ஸ்டெர்லைட்டுக்காக கூச்சலிடும் பாஜக கூட்டம் இது பற்றி பேசுவார்களா? 4,6 வாரத்திற்குள் ஆக்சிசனை மருத்துவமனைக்குள்ளாகவே உருவாக்கும் வாய்ப்பிருந்தும் இந்த வசதியைப் பற்றி ஏன் மோடி அரசு வாய் திறக்க மறுக்கிறது? என்று கேட்கும் திருமுருகன்காந்தி,

’’இந்த வசதியைப் பற்றி ஏன் மோடி அரசு வாய் திறக்க மறுக்கிறது? ’’

மோடியின் லண்டன் பயணத்தின்போது பெரும் செலவு செய்து விளம்பரப்படுத்திய ஸ்டெர்லைட் முதலாளி மோடியின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அவர் குஜராத்தி மார்வாடி. இதனாலேயே பாஜகவின் தமிழக தலைவர்கள் கூச்சிலிடுவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த கூச்சல்களை ஒதுக்கிவிட்டு பேரிடரை எதிர்கொள்ள அணியமாவோம். Pressure Swing Adsorption oxygen generator வசதி ரூ 1.25 கோடிக்குள் சாத்தியமாக்க முடியுமெனில், அதன் வழிவகைகளை ஆய்வு செய்வோம். தமிழக மக்களை காக்க ஒன்றுபட்டு நிற்போம் எனவும் மே17 இயக்கத்தின் சார்பில் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.