மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால்… வாடிக்கையாளர்களை அதிரவைத்த வங்கி அறிவிப்பு

 

மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால்… வாடிக்கையாளர்களை அதிரவைத்த வங்கி அறிவிப்பு

கொரோனா கொடுங்காலத்தினால் இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாள் ஊரடங்கு என்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால்… வாடிக்கையாளர்களை அதிரவைத்த வங்கி அறிவிப்பு

இதனால் தங்களது வேலை பறிபோய்விடுமோ? வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சூழல் மீண்டும் வந்துவிடுமோ? என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள். முதல் நிலையிலிருந்து மீண்டு வந்து தொழிலை ஆரம்பித்து கொஞ்சம் முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் கொரோனா இரண்டாவது வந்து மீண்டும் தங்களது வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வருமானத்திற்கு இப்போது அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் வங்கியின் இந்த அறிவிப்பை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால்… வாடிக்கையாளர்களை அதிரவைத்த வங்கி அறிவிப்பு

ஆக்சிஸ் வங்கி வரும் மே 1 ஆம் தேதி முதல் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. மினிமம் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைம் லிபர்டி, சேவிங் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் 25 ஆயிரமாக உயர்த்த பட்டிருக்கிறது. அப்படி மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ10 அபராதம் வசூலிக்கப்படும். மாதம் சராசரியாக 7,500 ரூபாய்க்கு கீழ் இருந்தால் 800 ரூபாய் வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்/