ஆஞ்சநேயர் பிறந்தது ஆந்திராவா ? கர்நாடகமா? திருப்பதி தேவஸ்தானம் சொல்லும் ஆதாரங்கள் சரியா?

 

ஆஞ்சநேயர் பிறந்தது ஆந்திராவா ? கர்நாடகமா? திருப்பதி தேவஸ்தானம் சொல்லும் ஆதாரங்கள் சரியா?

ஆஞ்சநேயர் பிறந்தது திருமலை அஞ்சனாத்திரி மலைதான் என்று திருப்பதி தேவஸ்தானம் ஆதாரங்களுடன் சொல்லி இருக்கிறது. ராமரின் பிறப்பிடம் அயோத்தி என்பது மாதிரி, அனுமனின் பிறப்பிடம் திருமலை அஞ்சனாத்திரி என்று அடித்துச் சொல்கிறது திருப்பதி தேவஸ்தானம்.

ஆஞ்சநேயர் பிறந்தது ஆந்திராவா ? கர்நாடகமா? திருப்பதி தேவஸ்தானம் சொல்லும் ஆதாரங்கள் சரியா?

ராமநவமி விழா நேற்று முன்தினம் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டது. திருப்பதியிலும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி மலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து வெளியிட்டது திருப்பதி தேவஸ்தானம். அந்த புத்தக பிறவியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் உரையாற்றிய போது, ’’ஆஞ்சநேயரின் பக்தனான நான் அவர் பிறந்தது திருமலை அஞ்சனாத்திரி என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆஞ்சநேயரின் பிறப்பிடம் அஞ்சனாத்திரி என்பதை புராண வாய்வழி அறிவியல் புவியியல் ஆதாரங்களுடன் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்த ஆய்வில் ஆறு மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

ஆஞ்சநேயர் பிறந்தது ஆந்திராவா ? கர்நாடகமா? திருப்பதி தேவஸ்தானம் சொல்லும் ஆதாரங்கள் சரியா?

திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் விடுத்த செய்திக் குறிப்பில், இந்த புத்தகம் அறிஞர்கள், அறிவியல் மற்றும் புவியியல் சான்றுகளுடன் சேகரித்து அதன் மூலம் பெறப்பட்டிருக்கிறது. விரைவில் புத்தக வடிவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆஞ்சநேயரின் பிறப்பு கதை ஸ்ரீமத் ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின் பல புராணங்களிலும் வெங்கடாசல காரியத்திலும் பல இலக்கியங்களிலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. சுந்தரகாண்டத்தில் ஆஞ்சநேயரை தனது பிறந்த கதையை சீதா தேவியிடம் சொன்னதாகவும் இருக்கிறது. திருமலையிலும் இதுகுறித்து இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது.

ஆஞ்சநேயர் பிறந்தது ஆந்திராவா ? கர்நாடகமா? திருப்பதி தேவஸ்தானம் சொல்லும் ஆதாரங்கள் சரியா?

வெங்கடேஸ்வர மதியம், வராக புராணம், கம்பராமாயணம், வால்மிகி ராமாயணம் உள்ளிட்ட 12 புராண இதிகாசங்களில் அஞ்சனாத்ரி மலையில்தான் ஆஞ்சநேரம் பிறந்தார் கூறப்பட்டிருக்கிறது, அன்னமாச்சாரியார் 14ம் நூற்றாண்டில் பாடிய கீர்த்தனைகள் சாசனங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பூகோள தகவல்கள் அனைத்திலும் ஆஞ்சநேயர் அஞ்சனாத்திரி மலையில்தான் பிறந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது என்கிறது திருப்பதி தேவஸ்தானம்.

ஆஞ்சநேயர் பிறந்தது ஆந்திராவா ? கர்நாடகமா? திருப்பதி தேவஸ்தானம் சொல்லும் ஆதாரங்கள் சரியா?

ஆனால், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஹம்பி ஷேத்திரம் தான் ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்று சொல்லப்பட்டு வந்தது. இது கிஸ்கிந்தா என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அதனால், ஆஞ்சநேயர் பிறந்தது ஆந்திராவா? கர்நாடகமா? என்பதில் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடெங்கிலும் உள்ள பக்தர்கள் கூட்டம் திரண்டு வரும் வழக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆஞ்சநேயர் பிறப்பிடம் திருமலை தான் என்பது தீர்மானமாக தெரிந்தால், இன்னும் பக்தர்கள் திருப்பதிக்கு வர கூடும் என்று தெரிகிறது.