’’நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல’’

 

’’நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல’’

மத்திய அரசிடம் மாநில அரசுகள் ஆக்சிஜனுக்காகக் கையேந்தி நிற்கின்றன. ஆனால் மத்திய அரசோ எதையும் கண்டுகொள்ளாமல் ஆக்சிஜன் அனுப்பாமல் இருப்பதாக டெல்லி அரசு குற்றஞ்சாட்டுகிறது. மத்திய அரசின் இந்தப் போக்கை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லியில் செயல்பட்டுவரும் பாலாஜி மருத்துவமனை நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில்,

’’நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல’’

ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். மாநிலங்கள் கேட்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யும் தார்மீக பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் திண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தொழிற்சாலைகள் நல்லபடியாக இயங்குவது எப்படி? இது உங்களிடம் மனிதாபிமான உணர்வு இல்லை என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது. உங்களின் போக்கு மிகவும் அபத்தமானது. பார்க்கவே அதிர்ச்சியளிக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க அனைத்து வழிகளையும் ஆராய வேண்டும். அவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். எந்த இடத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் சுணக்கம் காட்டவே கூடாது. எப்படியெல்லாம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம் என்று யோசியுங்கள். ஆக்சிஜனை யாரிடமாவது பிச்சை எடுங்கள். கடன் வாங்குங்கள். கெஞ்சி கேளுங்கள். என்ன ஆனாலும் பாடுபட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள். அதுவே உங்களின் தார்மீக கடமை. அதை ஒருபோதும் தட்டிக் கழிக்காதீர்கள். அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாகத் துரிதப்படுத்துங்கள் என்று நீதிபதிகள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

’’நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல’’

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும் உயர்ந்திருக்கிறது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ‘’அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல.’’என்று தெரிவித்திருக்கிறார்.