Home அரசியல் அந்த 6 நாட்கள்... ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்

அந்த 6 நாட்கள்… ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்

குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்ற திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பியிருக்கிறார்.

அந்த 6 நாட்கள்... ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்
அந்த 6 நாட்கள்... ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்

கடந்த 16ஆம் தேதி சென்னையிலிருந்து மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் 16 பேருடன் விமானம் மூலம் புறப்பட்டு மதுரை சென்ற ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானல் சென்றார். கொடைக்கானலில் பாம்பார் புரத்தில் உள்ள நட்சத்திர விடுதியான ’தாமரா’ ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கினார் ஸ்டாலின்.

அந்த 6 நாட்கள்... ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்

தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் அறையை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார் ஸ்டாலின். பல மாதங்களாக தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தைகள் என்று டென்ஷனாக இருந்ததால், தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் அறையை விட்டு வெளியே வராமல் ஓய்வில் இருந்திருக்கிறார்.

திங்கட்கிழமை அன்று தான் விடுதியில் இருந்து குடும்பத்தினருடன் கார் மூலம் அவர் கொடைக்கானலை சுற்றிப் பார்த்திருக்கிறார். கொடைக்கானல் மேல்மலை பகுதியான மன்னவனூர், கூக்கால் மலை கிராமங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று, அங்கு மத்திய அரசின் செம்மறி ஆடுகள் உரோம ஆராய்ச்சி பண்ணை, முயல் பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.

அந்த 6 நாட்கள்... ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்

பின்னர் மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி இடங்களுக்கும் சென்று குடும்பத்தினருடன் மகிழ்ந்த ஸ்டாலின், பிரச்சாரத்தின் போது தான் சந்தித்த அனுபவங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய ஸ்டாலின், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், திமுக ஆட்சிக்கு வந்தால் யார் யாருக்கு என்னென்ன இலாகா? எந்தெந்த அதிகாரிகளுக்கு என்னென்ன பொறுப்பு? என்பது குறித்தெல்லாம் குடும்பத்தினருடன் ஆலோசித்திருக்கிறார்.

அந்த 6 நாட்கள்... ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்

நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட 11 பேர் திங்கட்கிழமை அன்றே சென்னை புறப்பட்டு வந்து விட்டனர். ஆனால் மு.க. ஸ்டாலினும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மேலும் இரண்டு நாட்கள் கொடைக்கானலிலேயே தங்கியிருந்தனர்.

அந்த 6 நாட்கள்... ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்

ஆறு நாட்கள் ஓய்வுக்கு பின்னர் நேற்று மாலையில் கார் மூலம் கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்டாலின், மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு வந்து விட்டார்

அந்த 6 நாட்கள்... ஸ்டாலின் கொடைக்கானல் அனுபவங்கள்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும்… தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் நவி மும்பையில் தொழிலாளர் தலைவர் மறைந்த...

ஆப்கானிஸ்தானில் நிறைய முதலீடு செய்துள்ளோம்.. தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும்.. பரூக் அப்துல்லா

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி செய்யும் தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பான தலிபான் கைப்பற்றியுள்ளது. தற்போது...

பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் பதவியை இழக்க நேரிடும்

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவியை...

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது… அகிலேஷ் யாதவ்

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். 2021ம் ஆண்டு மக்கள் தொகை...
TopTamilNews