ம.நீ.மய்யத்தில் இருந்து ஏன் விலகினேன்? கமீலா பரபரப்பு விளக்கம்

ம.நீ.மய்யத்தில் இருந்து ஏன் விலகினேன்? கமீலா பரபரப்பு விளக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த கமீலா நாசர், இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதை கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

ம.நீ.மய்யத்தில் இருந்து ஏன் விலகினேன்? கமீலா பரபரப்பு விளக்கம்

தான் ராஜினாமா செய்யப்போவதாக அண்மையில் கமீலா நாசர் கமலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் தான் இன்று அவர் கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியில் இருந்து கமீலா நாசர் விலகியதற்கு காரணம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தான் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் நாசருக்கும் சரத்குமாருக்கும் எழுந்த பிரச்சனையின் காரணமாக, சரத்குமார் ம.நீ.மய்யத்துடன் இணைந்ததை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் கமீலா விலகினார் என்ற பேச்சு இருக்கிறது.

ம.நீ.மய்யத்தில் இருந்து ஏன் விலகினேன்? கமீலா பரபரப்பு விளக்கம்

இந்நிலையில் கமீலா அளித்துள்ள விளக்கத்தில், ’’என் சொந்த பணிகள் காரணம் கருதி மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடைபெறுகிறேன்’’என்று தெரிவித்திருக்கிறார்.

ம.நீ.மய்யத்தில் இருந்து ஏன் விலகினேன்? கமீலா பரபரப்பு விளக்கம்