ரஜினிகாந்த் சார், நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்..அத்வைத் மனாஷி

 

ரஜினிகாந்த் சார், நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்..அத்வைத் மனாஷி

1980ல் அறிமுகமான விளையாட்டுதான் ரூபிக்ஸ் கியூப். இன்றைக்கு உலகம் முழுவதும் பலராலும் இது விரும்பி விளையாடப்படுகிறது. அறிவைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு ரூபிக்ஸ் கியூப். இதில் பலர் சாதனை படைத்து வருகிறார்கள். பெங்களூருவை சேர்ந்த சிறுவன் அதர்வா பாத், ஒரே நேரத்தில் கை மற்றும் கால்களை பயன்படுத்தி மூன்றூ கியூப்களை ஒன்று சேர்த்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார். முன்னதாக சீனாவை சேர்ந்த ஜியானு கியூ எனும் சிறுவன் இந்த சாதனையை நிகழ்ச்சி இருந்தான். சென்னையை சேர்ந்த இளைஞர் இளையராம் சேகர் தண்ணீருக்குள் அமர்ந்து ரூபிக் கியுப்ஸ் விளையாடி சாதனை படைத்தார்.

ரஜினிகாந்த் சார், நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்..அத்வைத் மனாஷி

கேரள மாநிலம் கொச்சியில் ஆதர்ஷா வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் அத்வைத் மனாஷி, ரூபிக்ஸ் கியூப்பில் புதிய சாதனை படைத்து வருகிறார்.

ரஜினிகாந்த் சார், நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்..அத்வைத் மனாஷி

300 க்யூப்ஸைப் பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தினை வரைந்திருக்கிறார். முன்னதாக அவர், நடிகர்கள் மம்முட்டி, சுரேஷ்கோபி, சல்மான்கான், பாடகி சித்ரா, பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் , கேரள முதல்வர் பினராயி விஜயன், இயேசுநாதர், கிரிக்கெட் வீரர் சச்சின், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலரின் உருவப்படங்களை வரைந்து பலரின் பாராட்டுகளையும் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

ரஜினிகாந்த் சார், நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்..அத்வைத் மனாஷி

ரஜினிகாந்த் உருவப்படம் குறித்து ரஜினிக்கு அவர் தனது டுவிட்டர் மூலமாக, ‘’ரஜினிகாந்த் சார், நான் அத்வைத் மனாஷி. கேரளா மாநிலம் கொச்சி கக்கநாடுவில் உள்ள பவன்ஸ் ஆதர்ஷா வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். ரூபிக் க்யூப்ஸ் தீர்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். ரூபிக் கியூப்ஸ் க்யூப்ஸுடன் உருவப்படங்களை உருவாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். 300 க்யூப்ஸைப் பயன்படுத்தி இந்த உருவப்படத்தை உருவாக்க முயற்சித்தேன். நீங்கள் இந்த உருவப்படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்!’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் சார், நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்..அத்வைத் மனாஷி

இந்த ரஜினிகாந்த் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அத்வைத் மனாஷிக்கு, அதை வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அத்வைக்கு ரஜினி ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.